இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி அறிவிப்பு.. முழு அணி விவரம் இங்கே

மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடர் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் பெரும் அதிர்ச்சியாக ரோஹித் சர்மா மூன்று அணிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை. டெஸ்ட் அணியில் இருந்து இஷாந்த் சர்மா பெயர் நீக்கப்பட்டுள்ளது.

டி20 அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார். ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

செம ட்விஸ்ட்.. ஷமியை வைத்து திட்டம் போட்ட பஞ்சாப் கேப்டன்.. மிரள வைத்த மார்கன்.. தரமான செய்கை!

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

தற்போது 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நவம்பர் 14 அன்று முடிவுக்கு வருகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி வீரர்கள் அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

கொரோனா வைரஸ் லாக் டவுனுக்கு பின் இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் கிரிக்கெட் தொடர் இதுதான். ஆஸ்திரேலிய அணி முன்னதாக இங்கிலாந்து சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

நேரடியாக வீரர்கள் செல்ல திட்டம்

நேரடியாக வீரர்கள் செல்ல திட்டம்

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள்நேரடியாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்காத இந்திய வீரர்கள் கடந்த சில நாட்கள் முன்பு அங்கே சென்று குவாரன்டைனில் உள்ளனர். ஒட்டு மொத்த இந்திய அணியும் ஒன்றாக ஆஸ்திரேலியா கிளம்பிச் செல்லும் வகையில் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ரோஹித், இஷாந்த் இல்லை

ரோஹித், இஷாந்த் இல்லை

டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் ரோஹித் சர்மாவுக்கு எந்த அணியிலும் இடம் அளிக்கப்படாதது தான். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை அணியில் தேர்வு செய்யவில்லை. டெஸ்ட் அணி வீரர் இஷாந்த் சர்மாவும் காயத்தில் சிக்கி உள்ளார். அவரும் தேர்வு செய்யப்படவில்லை.

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் அணி - விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கேஎல் ராகுல், புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், விரிதிமான் சாஹா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ்

ஒருநாள் அணி

ஒருநாள் அணி

இந்திய ஒருநாள் அணி - விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்

டி20 அணி

டி20 அணி

இந்திய டி20 அணி - விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி

போட்டி அட்டவணை

போட்டி அட்டவணை

ஒருநாள் போட்டி அட்டவணை:

  • முதல் ஒருநாள் போட்டி - நவம்பர் 27
  • 2வது ஒருநாள் போட்டி - நவம்பர் 29
  • 3வது ஒருநாள் போட்டி - டிசம்பர் 1

டி20 தொடர் அட்டவணை:

  • முதல் டி20 போட்டி - டிசம்பர் 4
  • 2வது டி20 போட்டி - டிசம்பர் 6
  • 3வது டி20 போட்டி - டிசம்பர் 8

டெஸ்ட் தொடர்:

  • முதல் டெஸ்ட் - டிசம்பர் 17 - 21 - அடிலெய்டு
  • 2வது டெஸ்ட் - டிசம்பர் 26 - 31 - மெல்போர்ன்
  • 3வது டெஸ்ட் - ஜனவரி 7 - 11 - சிட்னி
  • 4வது டெஸ்ட் - ஜனவரி 15 - 19 - பிரிஸ்பேன்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India vs Australia : T20, ODI and test squad announced
Story first published: Monday, October 26, 2020, 22:22 [IST]
Other articles published on Oct 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X