For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதை செய்ய முடியலைனா எதுக்கு கேப்டன் பதவி.. ஏமாற்ற முடியாது.. செம சிக்கலில் கோலி.. கசிந்த தகவல்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் பல வகைகளில் விராட் கோலிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

அதன் காரணமாக அவரது கேப்டன்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை அவருக்கு மிக முக்கியமானதாக மாறி உள்ளது.

அந்த உலகக்கோப்பை தொடரில் அவர் தன் கேப்டன்சியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இப்படியா பண்ணுவாங்க? கட்டுப்பாட்டை இழந்த இளம் வீரர்.. சாட்டையை எடுத்த கேப்டன் கோலி!இப்படியா பண்ணுவாங்க? கட்டுப்பாட்டை இழந்த இளம் வீரர்.. சாட்டையை எடுத்த கேப்டன் கோலி!

கோலி கேப்டன்சி

கோலி கேப்டன்சி

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக போட்டிகளில் வெற்றிகள் பெற்றாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கோப்பை வெல்லவில்லை

கோப்பை வெல்லவில்லை

குறிப்பாக, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி வரை முன்னேறியும், 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேறியும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இரண்டு பெரிய தொடர்களிலும் இந்திய அணி கோப்பை வெல்லவில்லை.

ஐபிஎல் தோல்விகள்

ஐபிஎல் தோல்விகள்

ஐசிசி தொடர்கள் மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் கேப்டனாக ஐபிஎல் தொடரிலும் எட்டு ஆண்டுகளில் விராட் கோலியால் ஐபிஎல் கோப்பை வெல்ல முடியவில்லை. இதன் மூலம், கோப்பை வெல்லாத கேப்டன் என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறார் கோலி.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பை வென்றுள்ள நிலையில் அவரை டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அது விராட் கோலிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.

இனியும் பொறுக்க முடியாது

இனியும் பொறுக்க முடியாது

2019 உலகக்கோப்பை தொடரின் தோல்வியை அடுத்து அப்போதே ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அப்போது அதை உடைத்த கோலி, மீண்டும் 2020 ஐபிஎல் தொடரின் முடிவிலும் அதே அழுத்தத்தை சந்தித்துள்ளார். இனியும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்ற நிலையை அவரே உருவாக்கி உள்ளார்.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

2021 டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதில் கேப்டன் விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக கோப்பை வென்று கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கேப்டன்சி மாறலாம்

கேப்டன்சி மாறலாம்

ஒருவேளை அந்த தொடரில் கேப்டன் கோலி கோப்பை வெல்லத் தவறினால் அப்போது அவர் கேப்டன்சியை இழக்க நேரிடலாம். அப்போது அவருக்கு அதிக ஆதரவு இல்லாத நிலை ஏற்படும் என்பதால் பிசிசிஐ அந்த முடிவை எடுக்கக் கூடும்.

இரண்டு முக்கிய தொடர்கள்

இரண்டு முக்கிய தொடர்கள்

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் விராட் கோலி தன் கேப்டன்சியை நிரூபிக்க இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெறுவதுடன், 2021 ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணிக்கும் கோப்பை வென்று கொடுத்தால் அவர் கேப்டன்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

ரோஹித் சர்மா மட்டுமின்றி கேஎல் ராகுலும் கேப்டன்சிக்கான போட்டியில் இருக்கிறார். விராட் கோலி இனி ஒவ்வொரு தொடரையும் முக்கியமானதாக கருதினால் மட்டுமே கேப்டன்சியை தக்க வைக்க முடியும். அந்த வகையில் 2021ஆம் ஆண்டு அவருக்கு முக்கியமான ஆண்டாக மாறி உள்ளது.

Story first published: Monday, November 23, 2020, 16:29 [IST]
Other articles published on Nov 23, 2020
English summary
India vs Australia : Virat Kohli captaincy under scanner in the year 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X