எல்லாம் சரியா தான் இருக்கு.. பதற்றமே இல்லை.. உலகக்கோப்பைக்கு தயாரா இருக்கோம்.. கோலி செம காமெடி!

எல்லாம் சரியா தான் இருக்கு, பதற்றமே இல்லை: கோலி நம்பிக்கை- வீடியோ

டெல்லி : இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருப்பதாகவும், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது எந்த விதத்திலும் வீரர்களை பாதிக்கவில்லை என கேப்டன் கோலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை 2-3 என இழந்தது.

Also Read | பொறுப்பா ஆடுற தினேஷ் கார்த்திக் வேணுமா? அனுபவம் இல்லாத ரிஷப் பண்ட் வேணுமா? முடிவு பண்ணிக்குங்க!

அணிக்கு பின்னடைவு

அணிக்கு பின்னடைவு

இதை அடுத்து, உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா சரியான அணியை தேர்வு செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

தயார்

தயார்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய கேப்டன் கோலி, இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருப்பதாக கூறினார். மேலும், உலகக்கோப்பை தொடருக்கான 11 வீரர்கள் யார் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் கூறியுள்ளார் கோலி.

ஹர்திக் பண்டியா

ஹர்திக் பண்டியா

இன்னும் ஒரே ஒரு இடத்திற்கு மட்டுமே எந்த வீரரை தேர்வு செய்யலாம் என்பதில் குழப்பம் உள்ளது. ஹர்திக் பண்டியா மீண்டும் அணிக்கு திரும்பினால் அதுவும் சரியாகிவிடும் என கூறினார் கோலி

பதற்றம் இல்லை

பதற்றம் இல்லை

மேலும், தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்ததால், வீரர்கள் யாரும் பதற்றமடையவில்லை எனவும் தெரிவித்தார். ஏனெனில், உலகக்கோப்பையில் சரி சமமான அணி தான் பங்கேற்கும் என அனைவருக்கும் தெரியும் எனவும் கூறினார். கோலி என்ன சொன்னாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய அணியின் மீது நம்பிக்கை இன்றியே இருக்கின்றனர் என்பது உண்மை.

சமநிலை

சமநிலை

ஒவ்வொரு தொடரிலும், போட்டியிலும் எந்த வீரர், எந்த இடத்தில் ஆடுவார் என்பதே தெரியாத நிலை தான் கடந்த ஒரு வருடமாகவே இந்திய அணியில் இருக்கிறது. அப்புறம் எப்படி உலகக்கோப்பையில் மட்டும் சமநிலை கொண்ட அணி ஆடும் என கோலி கூறுகிறார்? எப்போது அந்த சமநிலை கொண்ட அணி களத்தில் ஆடி வெற்றிகளை குவித்தது? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Australia : Virat Kohli says team is not panicking about series loss
Story first published: Thursday, March 14, 2019, 14:48 [IST]
Other articles published on Mar 14, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X