For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 நிமிடம் அமைதியா இருக்க முடியாதா? டி20 போட்டியில் மௌன அஞ்சலியின் போது கூச்சல்!

விசாகப்பட்டினம் : இந்திய - ஆஸ்திரேலியா மோதிய முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்த போட்டிக்கு முன்னதாக புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மரியாதையை அளிக்கும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூச்சல்

கூச்சல்

அப்போது இரு அணி வீரர்களும் களத்தில் மௌனமாக இரண்டு நிமிடம் நின்று மரியாதை செலுத்தினர். ஆனால், விசாகப்பட்டினத்தில் போட்டியை காண வந்த பார்வையாளர்கள் சிலர் கூச்சல் போட்டதால் பரபரப்பு எழுந்தது.

முழக்கமிட்டனர்

முழக்கமிட்டனர்

சமூக வலைதளங்களில் பார்வையாளர்களின் செயல்பாடு சிலரால் விமர்சிக்கப்பட்டு உள்ளது. அப்படி பார்வையாளர்கள் என்ன தான் செய்தார்கள்? 2 நிமிட மௌன அஞ்சலி தொடங்கிய உடன் சிலர் "பாரத் மாதா கீ ஜே" என முழக்கமிட ஆரம்பித்தார்கள்.

பேனர்கள்

பேனர்கள்

பின்னர் அதை பலரும் பின் தொடர்ந்தனர். அதே சமயம், சிலர் கூச்சல் போட நிலைமை மோசமானது. இது ஒருபுறமிருக்க, சிலர் புல்வாமா தாக்குதல் குறித்த பேனர்கள் எடுத்து வந்திருந்தனர். அவர்கள் தொலைக்காட்சியில் நம்மை காட்ட மாட்டார்களா? என பார்த்துக் கொண்டு இருந்தனர். சிலர் எப்போதும் போல தொலைபேசி பயன்படுத்திக் கொண்டு இருந்தனர்.

இது மௌன அஞ்சலி

இது மௌன அஞ்சலி

இது அனைத்துமே மௌன அஞ்சலிக்கு எதிரானவை தான். சமூக வலைதளங்களில் ஒருவர் "பாரத் மாதா கீ ஜே" என்ற முழக்கம் எப்படி மௌன அஞ்சலி ஆகும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

புரியாமல் இருக்கிறார்கள்

புரியாமல் இருக்கிறார்கள்

மக்கள் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் நடந்து கொள்கிறார்கள் எனவும் வருத்தப்படு சிலர் பதிவிட்டுள்ளனர். 2 நிமிட மௌன அஞ்சலி துவங்கிய சில வினாடிகள் வரை மக்கள் பலர் அதை புரிந்து கொள்ளவில்லை. இதற்கான அறிவிப்பை முன் கூட்டியே தெரிவித்து இருந்தால், ஒருவேளை பார்வையாளர்கள் ஒத்துழைப்பு அளித்திருப்பார்கள்.

அஸ்வினுக்கு அப்புறம் பும்ரா மட்டுமே! டி20யில் அசத்தல் மைல்கல் சாதனை.. 2ஆம் இடத்தில் பும்ரா! அஸ்வினுக்கு அப்புறம் பும்ரா மட்டுமே! டி20யில் அசத்தல் மைல்கல் சாதனை.. 2ஆம் இடத்தில் பும்ரா!

Story first published: Monday, February 25, 2019, 14:47 [IST]
Other articles published on Feb 25, 2019
English summary
India vs Australia : Vizag crowd behaviour slammed by some people. The some sections of the crowd was not keeping silence during the homage.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X