தொடர்ச்சியாக 5வது அரைசதம்.. 20,000 ரன்கள் - பெண்கள் கிரிக்கெட்டின் உச்சம் மிதாலி ராஜ்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் மூன்று ஒருநாள், 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதில், முதல் ஒருநாள் போட்டி இன்று (செப்.21) மெக்கே-வில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா 8 ரன்களிலும், ஸ்மிரிதி மந்தனா 16 ரன்களிலும் வெளியேற, இளம் வீராங்கனை யஸ்திகாவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் மிதாலி. இருவரும், அணியை சரிவில் இருந்து ஓரளவுக்கு மீட்டனர். யஸ்திகா 35 ரன்களில் வெளியேற, கேப்டன் மிதாலி 107 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். எனினும், மற்ற வீராங்கனைகள் பெரியளவில் சோபிக்காததால், இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களே எடுத்தது. டாப் ஸ்கோரர் மிதாலி ராஜ் தான். தற்போது ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில், கேப்டன் மிதாலி ராஜ் மெகா சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, மிதாலி ராஜ் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக தனது ஐந்தாவது அரைசதத்தை அடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை அவர் பூர்த்தி செய்திருக்கிறார். மிதாலி இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 75*, 59 மற்றும் 72 ரன்கள் எடுத்தார். பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 79 ரன்கள் விளாசினார். இப்போது மீண்டும் அரைசதம் அடித்து, தொடர்ச்சியாக தனது 5வது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். இது அவரது 59வது அரைசதமும் கூட.

ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அதுபோல பெண்கள் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ். கடந்த 22 ஆண்டுகளாக இவரது பெயர் மட்டுமே இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வருகிறது. 22 ஆண்டுகளாக தனது தோளில் இந்திய பெண்கள் அணியை சுமந்து வரும் மிகச் சில கிரிக்கெட் வீராங்கனைகளில் முக்கியமானவர் மிதாலி ராஜ் தான்.

Sachin Record உடன் இணைந்தார் Mithali Raj! BCCI பாராட்டு | OneIndia Tamil

மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற மிகப்பெரும் உலக சாதனையும் மிதாலி ராஜ் வசம் தான் இருக்கிறது. இங்கிலாந்து வீராங்கனை Charlotte Edwards 10,273 ரன்களுடன் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், அவரின் சாதனையை கடந்த ஜுலை மாதம் மிதாலி முறியடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக மிதாலி தற்போது 20,000 ரன்களை கடந்திருக்கிறார்.

RCB vs KKR: அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் நன்கொடை - சிலிர்க்க வைக்கும் ஆர்சிபி அணி RCB vs KKR: அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் நன்கொடை - சிலிர்க்க வைக்கும் ஆர்சிபி அணி

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mithali Raj 5th consecutive half-century, 20000 runs- மிதாலி
Story first published: Tuesday, September 21, 2021, 12:18 [IST]
Other articles published on Sep 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X