For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரா.. அதுக்குள்ள வந்துட்டாரா? உலகின் பெஸ்ட் விக்கெட் கீப்பர் ரெடி.. சொன்னதை செய்த கங்குலி!

சிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள மூன்று வீரர்கள் காயத்தில் சிக்கி உள்ளனர்.

அவர்களில் ஒருவரான விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா அதிரடியாக களத்துக்கு திரும்பி உள்ளார்.

அவரால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மீண்டும் களத்துக்கு திரும்பி உள்ளார்.

கிரிக்கெட் தொடர்

கிரிக்கெட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் தொடர்கள் வரும் நவம்பர் 27 முதல் துவங்க உள்ளன. இதில் டெஸ்ட் தொடர் தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 அன்று துவங்க உள்ளது.

சவால்

சவால்

இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு சவாலானதாக மாறி உள்ளது. கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா திரும்ப உள்ளார். அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், ஜனவரி மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.

காயம்

காயம்

அதை ஒட்டி அவர் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். கோலி இல்லாத நிலையில் பேட்டிங் பலவீனம் அடையும். மறுபுறம் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, விரிதிமான் சாஹா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவராலும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது.

விரிதிமான் சாஹா

விரிதிமான் சாஹா

ரோஹித் சர்மா 70 சதவீத உடற்தகுதியுடன் இருந்ததால் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்ற நிலை உள்ளது. ஆனால், விரிதிமான் சாஹாவுக்கு இரண்டு தசைப்பிடிப்புகள் ஏற்பட்டு இருந்தது. அவரால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்விக்கு கங்குலி உறுதி கூறி இருந்தார்.

கங்குலி உறுதி

கங்குலி உறுதி

சவுரவ் கங்குலி, சாஹா நிச்சயம் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்றார். அதன் படி விரிதிமான் சாஹா தற்போது பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். இந்திய அணி பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் தேறி வந்த அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.

பிசிசிஐ வீடியோ

பிசிசிஐ வீடியோ

சாஹா பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அந்த வீடியோவில் இரண்டு த்ரோடவுன் நிபுணர்கள் அவருக்கு பந்து வீசினர். சாஹா எந்த சிரமமும் இன்றி பேட்டிங் செய்தார். அவர் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாகவே தெரிகிறது.

சிறந்த விக்கெட் கீப்பர்

சிறந்த விக்கெட் கீப்பர்

விரிதிமான் சாஹா தான் தற்போது உலகில் ஆடி வரும் டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர்களில் சிறந்த ரெக்கார்டு வைத்துள்ளார். அவர் இல்லாமல் போனால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கும். ஆனால், அவரை விரைவாக தயார் செய்துள்ளது பிசிசிஐ.

மாற்றிய கங்குலி

மாற்றிய கங்குலி

முன்பு இந்திய வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பயிற்சி சரியாக இல்லை என்ற குறை இருந்தது. இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி சாஹா நிச்சயம் தயார் ஆவார் என உறுதி கூறி அதை செயல்படுத்தியும் காட்டி உள்ளார்.

நல்ல பார்ம்

நல்ல பார்ம்

விரிதிமான் சாஹா ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி ஆட்டம் ஆடினார். நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் இந்திய அணிக்கு கை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, November 19, 2020, 11:01 [IST]
Other articles published on Nov 19, 2020
English summary
India vs Australia : Wriddhiman Saha started practicing after healed from injury.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X