For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாண்டஸ் புயலால் இந்தியா, வங்கதேசம் ஆட்டம் பாதிப்பு ? நாளை போட்டி நடைபெறுமா? வானிலை அறிக்கை என்ன?

டாக்கா : இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.

தொடரை ஏற்கனவே வங்கதேச அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற நிலையில், ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணி நாளை களமிறங்குகிறது.

இந்த நிலையில் நாளை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

என்னா வேகம்.. சச்சின் டெண்டுல்கருக்கு பின் இவர் தான்.. இளம் வீரரை பாராட்டிய இந்திய ஜாம்பவான்! என்னா வேகம்.. சச்சின் டெண்டுல்கருக்கு பின் இவர் தான்.. இளம் வீரரை பாராட்டிய இந்திய ஜாம்பவான்!

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

நியூசிலாந்து தொடரில் பெரும்பான்மையாக மழை தான் விளையாடியது. ஆனால் வங்கதேசத்தில் நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வங்க கடலில் மாண்டஸ் புயல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் சின்னம் ஏற்பட்டால் அது வங்கதேசம் வரை பாதிக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வானிலை என்ன?

வானிலை என்ன?

புயல் தமிழகத்தை தான் தாக்கும் என்றாலும் அதன் தாக்கம் வங்கதேசத்தில் ஏற்பட்டு மழை பெய்யுமா என்ற குழப்பம் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா வங்கதேச அணிகள் மோதும் ஆட்டம் சிட்டங்காமில் நடைபெறுகிறது. இங்கு போட்டி நடைபெறும் நாளான சனிக்கிழமை 18 டிகிரியில் இருந்து 28 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடுகளம்

ஆடுகளம்

சிட்டாகிராம் ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும். முதல் சில ஓவர்களில் பந்து பேட்டுக்கு நன்றாக வரும் என்றும் அதன் பிறகு சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெறுமா?

வெற்றி பெறுமா?

இதன் காரணமாக நாளை ஆட்டத்தில் இந்திய அணியில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதைப் போன்று ரோகித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷணும், கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் ஏற்று நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வங்கதேசத்திடம் இந்திய அணி தொடரை முழுமையாக இழந்ததில்லை. ஆனால் இந்த சோகமான சம்பவம் நடைபெற்று விடுமோ என்ற கலக்கத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்றால் விராட் கோலி, ஷிகர் தவான், ராகுல் போன்ற பேட்டிங்கில் அதிரடி காட்டினாலே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 9, 2022, 21:45 [IST]
Other articles published on Dec 9, 2022
English summary
India vs ban 3rd odi will affected by Mandous cyclone in bay of bengal - Here is the weather report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X