For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. வங்கதேச சுற்றுப்பயணத்தில் முக்கிய மாற்றம்.. என்ன காரணம்?

மும்பை: இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது, போராட்டங்கள் வெடிக்கும் என்பதால் மைதானங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்ட்யாவின் படை வென்றுவிட்ட, நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.

டெஸ்ட் கேப்டனாகும் புஜாரா.. பலே திட்டம் போட்ட பிசிசிஐ.. வங்கதேச தொடர் முதல் புதிய பதவி! டெஸ்ட் கேப்டனாகும் புஜாரா.. பலே திட்டம் போட்ட பிசிசிஐ.. வங்கதேச தொடர் முதல் புதிய பதவி!

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

நியூசிலாந்து தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவிருந்தன. இவை டிசம்பர் 4ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 26ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் மாற்றம்

மைதானத்தில் மாற்றம்

இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகளும் முதலில் தலைநகர் தாக்காவில் தான் நடைபெறவிருந்தது. 2015ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்திய அணி பயணம் செல்வதால் தலைநகரில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி மட்டும் தாக்காவில் இருந்து சாட்டோகிராம் நகரத்திற்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10ம் தேதியன்று நடைபெறுகிறது. இன்றைய தினம் தாக்காவில் பெரும் அரசியல் பேரணி நடைபெறவிருக்கிறது. வங்கதேசத்தை சேர்ந்த பிரபல அரசியல் கட்சியானது பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளது. பல்லாயிரம் பேர் கலந்துக்கொள்ளும் இதில் கலவரம் வரலாம் என்ற அச்சுறுத்தலால் போட்டி மாற்றப்பட்டுள்ளது.

சிட்டாகாங் பிட்ச்

சிட்டாகாங் பிட்ச்

சிட்டாகாங் முதலில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை மட்டும் தொகுத்து வழங்கவிருந்தது. ஆனால் அங்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடத்த தகுதியாக இருக்கும் என்பதால் இந்த மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பையிலேயே இந்தியா - வங்கதேசம் போட்டி படு விறுவிறுப்பாக இருந்தது. எனவே இந்த தொடரிலும் அது இருக்கும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Story first published: Thursday, November 24, 2022, 16:38 [IST]
Other articles published on Nov 24, 2022
English summary
India vs Bangladesh ODI match move from Dhaka stadium, due to protest threat by political party
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X