For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அதை செய்தால் வெற்றி உறுதி”.. முதல் டி20ல் இந்தியாவுக்கு உள்ள சவால்.. இன்று எப்படி சமாளிக்கும்?

சவுத்தாம்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடபெறவுள்ளது.

இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு தான் இந்த போட்டி தொடங்கும் என்பதால், ரசிகர்கள் முடிவு எப்படி இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா, பாக் மோதும் ஆட்டம் தேதி வெளியானது.. இலங்கையில் நடைபெறுவது உறுதிஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா, பாக் மோதும் ஆட்டம் தேதி வெளியானது.. இலங்கையில் நடைபெறுவது உறுதி

முதல் டி20 ஆட்டம்

முதல் டி20 ஆட்டம்

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் டி20 தொடரையாவது வென்றுவிட வேண்டும் என முணைப்புடன் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், இளம் படையுடன் தான் ரோகித் சர்மா களமிறங்கவுள்ளார்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு பிட்ச் ரிப்போர்ட் எப்படி சாதகமாக உள்ளது எனத்தெரியவந்துள்ளது. ரோஸ்பவுல் மைதானம் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிற்குமே சம அளவிலான ஒத்துழைப்பு இருக்கும். இதனால் இங்கு போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் எனக்கூறப்படுகிறது.

டாஸ் வெல்லும் அணி

டாஸ் வெல்லும் அணி

இந்த களத்தில் சராசரி ரன்கள் 160 ஆகும். ஆனால் முதலில் விளையாடும் அணி 170+ ரன்கள் வரை குவிக்க வேண்டும். எனவே டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்து அதிக ஸ்கோருக்கு குறி வைக்க வேண்டும். 160 என்ற ரன்களை இலக்காக வைத்தாலும், எதிரணியால் எட்டிப்பிடிக்க முடியும்.

எப்படி பார்ப்பது

எப்படி பார்ப்பது

இந்த போட்டியை எப்போதும் போல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. இந்த முறை சோனி சிக்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பார்க்கலாம். போட்டி முடிவடைய இரவு 1.30 மணி வரை ஆகலாம் எனக்கூறப்படுகிறது.

Story first published: Thursday, July 7, 2022, 20:56 [IST]
Other articles published on Jul 7, 2022
English summary
India vs england 1st t20 match ( இந்தியா vs இங்கிலாந்து முதல் டி20 போட்டி ) இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X