For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: காம்பீர் - விஜய் சிறப்பான தொடக்கம் இந்தியா 63/0

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2ம் நாள் ஆட்டத்தில் காம்பீர் - விஜய் சிறப்பான தொடக்கம் தந்தனர்.

By Karthikeyan

ராஜ்காட்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்காட்டில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்கள் எடுத்தது.

India Vs England, 1st Test: Here are the statistical highlights of Day 2

ஜோ ரூட் 180 பந்துகளில் 124 ரன்களும், மொய்ன் அலி 213 பந்துகளை சந்தித்து 117 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 235 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் மொய்ன் அலி 99 (192) ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 19 (41) ரன்களுடனும் 2ம் நாள் ஆட்டத்தை துவங்கினர்.

மொய்ன் அலி, ஸ்டோக்சின் சதத்தால் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியது. இந்திய அணியின் சொதப்பல் பீல்டிங்கால் இங்கிலாந்து அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஷமி, யாதவ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், மிஸ்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை எடுத்துள்ளது. காம்பீர் 28 ரன்னுடனும், முரளி விஜய் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Story first published: Thursday, November 10, 2016, 21:04 [IST]
Other articles published on Nov 10, 2016
English summary
Indian spinners were taken to the cleaners by the English batsmen as the visitors posted a mammoth 537 on the second day of the opening cricket Test here on Thursday (Nov 10).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X