For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

India vs England 1st Test Day 1: வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் லெவன் - முழு விவரம்

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நாளை (ஆக.4) நாட்டிங்கமில் நடைபெறுகிறது. இரு அணி வீரர்களும் இத்தொடருக்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஆனால், இந்திய அணி அதில் தோல்வி அடைய, இப்போது இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

india vs england 1st test when and where to watch weather pitch conditions playing xi

இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. டாஸ் பிற்பகல் 3 மணிக்கு போடப்படும்.

india vs england 1st test when and where to watch weather pitch conditions playing xi

1st Test IND vs ENG in Nottingham Weather Forecast

ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாமில், நாளை முதல் நாள் வானிலை மேகமூட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட்டில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தெரிகிறது. இரு அணிகளின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் இவர்களது பங்கே அதிகம் என்று கூறப்படுகிறது.

நாளை ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாமில் 22 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Precipitation - 12%, Humidity - 53%, Wind - 10 km/h என்று கணிக்கப்பட்டுள்ளது. (Credit: Weather.com/Screengrab)

1st Test IND vs ENG Live Streaming Details

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை Sony Sports Network-ல் காணலாம். ஆன்லைனில், தமிழ் மைக்கேல் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை கண்டுகளிக்கலாம்.

india vs england 1st test when and where to watch weather pitch conditions playing xi

1st Test IND vs ENG Pitch Report

IND vs ENG க்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India Playing XI

ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா/ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

india vs england 1st test when and where to watch weather pitch conditions playing xi

England Playing XI

ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, டான் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், ஓலே ராபின்சன், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

ENG vs IND SQUADS

இங்கிலாந்து அணி: ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (w), ஓலே ராபின்சன், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன், சாம் கர்ரன், ஜாக் லீச் , டொமினிக் பெஸ், ஓலே போப், ஹசீப் ஹமீட்

இந்திய அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், அக்சர் பட்டேல் , விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, அபிமன்யு ஈஸ்வரன்

இதற்கிடையில், பயிற்சியின் போது சிராஜ் வீசிய பந்து மாயங்க் அகர்வால் ஹெல்மெட்டை பதம்பார்க்க, அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "டிரன்ட்பிரிட்ஜில் வலைப்பயிற்சியி்ன்போது சிராஜ் வீசிய பந்து மாயங்க் ஹெல்மெட்டில் தாக்கியது. மருத்துவக் குழுவினர் அவருக்கு கன்கஸன் பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து மாயங்க் நீக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருந்தாலும், உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார். இதுகுறித்து இந்திய துணைக் கேப்டன் ரஹானே கூஒருகையில், "அணியில் உள்ள 21 வீரர்களும் நலமுடன், உடற்தகுதியுடன் விளையாடத் தயாராக உள்ளனர். விரைவில் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார். மாயங்க் தற்போது வெளியேறி இருப்பதால், ரோஹித் ஷர்மாவுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க அதிகம் வாய்ப்புள்ளது.

 85 வருடங்களுக்கு முன்பு.. ஜெர்மனியை அலற விட்ட இந்தியா - மீண்டும் ஒலிம்பிக்கில் அதே யுத்தம் 85 வருடங்களுக்கு முன்பு.. ஜெர்மனியை அலற விட்ட இந்தியா - மீண்டும் ஒலிம்பிக்கில் அதே யுத்தம்

Story first published: Tuesday, August 3, 2021, 21:32 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
india vs england 1st test playing xi - இந்தியா vs இங்கி.,
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X