4வது டெஸ்ட் தொடர்
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
தொடரும் 3வது டெஸ்ட் அணி
கடந்த 3வது டெஸ்ட்டில் இருந்தது போன்றே இந்த போட்டியில் அதிகமான எந்த மாற்றங்களும் இன்றி இந்திய அணி தொடர்கிறது. ஜஸ்பிரீத் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் போட்டியில் இடம்பெற்றுள்ளார். இதேபோல இங்கிலாந்து அணியில் ஒரு பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஸ்பின்னர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதிப்போட்டிக்கு தீவிரம்
இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்வதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. பிட்ச் குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தாலும் தாங்கள் அதுகுறித்து கவலையின்றி விளையாடுவோம் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பு
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை டிரா செய்ய இங்கிலாந்து அணி தீவிரமாக உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அடுத்ததாக உள்ள ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.