For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா -இங்கிலாந்துக்கு இடையிலான 4வது டெஸ்ட்... டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியுள்ளது.

போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும்.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை டிரா செய்ய முடியும் என்பதால் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டி வருகிறது.

4வது டெஸ்ட் தொடர்

4வது டெஸ்ட் தொடர்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடரும் 3வது டெஸ்ட் அணி

தொடரும் 3வது டெஸ்ட் அணி

கடந்த 3வது டெஸ்ட்டில் இருந்தது போன்றே இந்த போட்டியில் அதிகமான எந்த மாற்றங்களும் இன்றி இந்திய அணி தொடர்கிறது. ஜஸ்பிரீத் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் போட்டியில் இடம்பெற்றுள்ளார். இதேபோல இங்கிலாந்து அணியில் ஒரு பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஸ்பின்னர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதிப்போட்டிக்கு தீவிரம்

இறுதிப்போட்டிக்கு தீவிரம்

இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்வதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. பிட்ச் குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தாலும் தாங்கள் அதுகுறித்து கவலையின்றி விளையாடுவோம் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பு

ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பு

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை டிரா செய்ய இங்கிலாந்து அணி தீவிரமாக உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அடுத்ததாக உள்ள ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Story first published: Thursday, March 4, 2021, 10:59 [IST]
Other articles published on Mar 4, 2021
English summary
India vs England 2021 4th match starts in Ahamadabad Narendra modi stadium
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X