1998க்கு பிறகு இங்கிலாந்து இப்படி ஆடியதில்லை...அஸ்வின் மீண்டும் அபாரம்...4வது டெஸ்டின் சுவாரஸ்யங்கள்

அகமதாபாத்: இந்திய - இங்கிலாந்துக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளாலும் பல்வேறு சுவாரஸ்ய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இந்திய அணி 294 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.

இந்நிலையில் மொத்த 2 நாட்களே முடிந்துள்ள இந்த டெஸ்ட் இரு அணிகளாலும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

 ஸ்டார் வீரர்கள்

ஸ்டார் வீரர்கள்

வீராட் கோலி கேப்டனாக செயல்படும் 60வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இவர் 60 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட தோனியை சமன் செய்தார். அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் எடுத்ததன் மூலம் உள்நாட்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் 281 விக்கெட்டுடன் முதலிடத்திற்கு சென்றுள்ளார்.

இளம் வீரர்கள் சாதனை

இளம் வீரர்கள் சாதனை

அக்‌ஷர் பட்டேல் தான் அறிமுகமாகி 5 இன்னிங்ஸ்களில் 22 விக்கெட்களை எடுத்துள்ளார். முதல் 5 இன்னிங்ஸில் இவ்வளவு அதிகமான விக்கெட் எடுக்கும் 2வது இந்திய வீரர் அக்‌ஷர் பட்டேல் ஆகும். இதற்கு முன்னர் நரேந்திர ஹிர்வானி 27 விக்கெட் எடுத்துள்ளார். இதே போல் இந்திய மண்ணில் ஒரே தொடரில் 2 முறை டக் அவுட்டான 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார் சுப்மன் கில்.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

ஜோ ரூட் கேப்டனாக செயல்படும் 50வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் 4 பேர் மட்டுமே இதனை செய்துள்ளனர். இதே போல் இங்கிலாந்து அணி தொடர்ந்து 6வது இன்னிங்ஸாக 250 ரன்னுக்கு குறைவாக எடுத்துள்ளது. 1988ம் ஆண்டுக்கு பிறகு இவ்வளவு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்து வீரர்கள்

4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சுப்மன் கில்லை டக் அவுட் செய்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன். சர்வதேச டெஸ்டில் அதிக முறை பேட்ஸ்மேன்களை டக் அவுட்டாக்கிய வீரர்கள் பட்டியலில் 104 விக்கெட்டுடன் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மெக்கெர்த்தை சமன் செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் இன்று அடித்த அரை சதம் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 10வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் அதில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 4 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs England 4th Test: Records and more stats on Both sides
Story first published: Friday, March 5, 2021, 19:56 [IST]
Other articles published on Mar 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X