For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிர்பாராத முடிவு.. அலைக்கழிக்கப்பட்ட அஷ்வின்.. ‘கடைசி வரை வாய்ப்பு கொடுக்கல'.. ரசிகர்கள் ஆத்திரம்!

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தமிழக வீரர் அஸ்வின் கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்பாராத வகையில் முடிவு பெற்றுள்ளது. அதாவது 5வது டெஸ்ட் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் இந்தியா 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரே ஒரு போட்டி சமனில் முடிவடைந்துள்ளது.

கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின.. 5வது டெஸ்ட் போட்டியின் நிலை என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின.. 5வது டெஸ்ட் போட்டியின் நிலை என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

5வது டெஸ்ட் போட்டி

5வது டெஸ்ட் போட்டி

சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருப்பதால் அந்நாட்டு வீரர்கள் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே 5வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என மும்முரம் காட்டி வருகிறது. அதேவேளையில் தொடரை வெல்ல இந்திய அணியும் முனைப்பு காட்டி வருகிறது.

ஏமாற்றம் ரஹானே

ஏமாற்றம் ரஹானே

இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை சட்டீஸ்வர் புஜாரா தனது ஃபார்மை நிரூபித்து விட்டார். ஆனால் துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானே இன்னும் திணறி வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 109 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி ரன் 15.57 ஆகும்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இதனால் அவருக்கு மாற்றாக இந்த போட்டியில் ஹனுமா விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவை கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஹனுமா விஹாரிக்கு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய நல்ல அனுபவம் உள்ளது. அதேவேளையில் சூர்யகுமார் யாதவுக்கு ஒரு வாய்ப்பாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் கோலிக்கு உள்ளது. எனவே கடும் போட்டி நிலவி வருகிறது.

பவுலிங் படை

பவுலிங் படை

பந்துவீச்சை பொறுத்தவரை இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தை செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது. அதாவது நட்சத்திர வீரரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளது. இந்த தொடரில் இதுவரை அவர் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். எனவே அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, மீண்டும் முகமது ஷமியை அணிக்குள் கொண்டு வரவுள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ, அஸ்வினுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கப்படாது என்றே தெரிகிறது.

வாய்ப்பு கிடைக்காத அஸ்வின்

வாய்ப்பு கிடைக்காத அஸ்வின்

கடந்த 4 போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படாத சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுப்பது போல அஸ்வினுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் அஸ்வினை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைக் கூட நடைபெறவில்லை. ஜடேஜாவை மட்டுமே விராட் கோலி நம்பி வருவதாக ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். மேலும் கடைசி வரை அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Friday, September 10, 2021, 14:10 [IST]
Other articles published on Sep 10, 2021
English summary
India vs England 5th test match called off, Ashwin not even get a chance in one match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X