For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ கொடுத்த 2 சூப்பர் ஆஃபர்கள்.. இங்கிலாந்துக்கு அடித்த ஜாக்பாட்..ஜெய்ஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு 2 சூப்பர் ஆஃப்கர்களை பிசிசிஐ வழங்கியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சர்ச்சைகளுடன் முடிவு பெற்றுள்ளது.

4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்ற நிலையுல் 5வது டெஸ்ட் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.

2022ம் ஆண்டு ஜூலையில் 5வது டெஸ்ட்.. பிசிசிஐ போட்டுள்ள புதிய திட்டம்.. ஒருநாள், டி20ம் உண்டு - விவரம்2022ம் ஆண்டு ஜூலையில் 5வது டெஸ்ட்.. பிசிசிஐ போட்டுள்ள புதிய திட்டம்.. ஒருநாள், டி20ம் உண்டு - விவரம்

5வது டெஸ்ட் போட்டி

5வது டெஸ்ட் போட்டி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என முடிவு வந்தது. எனினும் வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனக்கூறி 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லை, ரத்து செய்துவிடலாம் பிசிசிஐ முடிவு செய்தது.

Recommended Video

Ind Vs Eng 5th Test BCCI offers ECB additional games next year | Oneindia Tamil
நஷ்டம்

நஷ்டம்

இந்திய அணியின் இந்த திடீர் முடிவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.304 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒளிபரப்பு உரிமம் மற்றும் ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானம் டிக்கெட் கட்டணம் என தொகைகள் திருப்பிக் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரும் பிரச்னை

பெரும் பிரச்னை

இது ஒருபுறம் இருக்க, போட்டியின் வெற்றியாளர் யார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. போட்டியின் வெற்றியாளரை நிர்ணயிக்க விசாரணை நடத்த வேண்டும் என ஐசிசிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. போட்டி நடைபெறாததால் எந்தவித புள்ளிகளும் வழங்கப்படாமல் 2 - 1 என இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் இந்திய அணி தான் தாமாக முன்வந்து விலகியது, எனவே இங்கிலாந்து அணிதான் வெற்றி பெற்றதாக அறிவிக்க அந்நாட்டு வாரியம் கோரி வருகிறது.

பிசிசிஐ-ன் முடிவு

பிசிசிஐ-ன் முடிவு

இதனிடையே இந்த பிரச்னைக்கு முடிவு கொடுப்பதற்காக சமீபத்தில் பிசிசிஐ ஒரு முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதாவது இந்திய அணி அடுத்தாண்டு (2022) ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதில் ஒருநாள் போட்டிகளுடன் சேர்த்து டெஸ்ட் போட்டியும் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியானது.

ஜெய்ஷா

ஜெய்ஷா

இந்நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஆனால் ஒருநாள் தொடருடன் சேர்த்து டி20 தொடரும் நடத்தப்படவுள்ளது. பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்படவுள்ளது. ஆனால் தற்போது கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்து வாரியத்திற்கு பிசிசிஐ 2 சலுகைகளை வழங்கியுள்ளது.

2 சலுகைகள்

2 சலுகைகள்

இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 போட்டிகளுக்கு பதிலாக கூடுதலாக 2 போட்டிகள் சேர்த்து மொத்தம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படும். அது வேண்டாம் என்று கருதினால் 3 டி20 போட்டிகளுடன் சேர்த்து விடுபட்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி விளையாடும். இதில் தேர்வு செய்ய வேண்டியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, September 14, 2021, 16:41 [IST]
Other articles published on Sep 14, 2021
English summary
BCCI gives 2 offer for England to Compromise the 5th test against india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X