For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2022ம் ஆண்டு ஜூலையில் 5வது டெஸ்ட்.. பிசிசிஐ போட்டுள்ள புதிய திட்டம்.. ஒருநாள், டி20ம் உண்டு - விவரம்

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்திக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சர்ச்சைகளுடன் முடிவு பெற்றுள்ளது.

ஐபிஎல்: 3 இங்கிலாந்து வீரர்கள் திடீர் விலகல்.. இந்திய வீரர்கள் மீதான கோபம்.. அதிர்ச்சியில் அணிகள்! ஐபிஎல்: 3 இங்கிலாந்து வீரர்கள் திடீர் விலகல்.. இந்திய வீரர்கள் மீதான கோபம்.. அதிர்ச்சியில் அணிகள்!

4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்ற நிலையுல் 5வது டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

5வது டெஸ்ட் போட்டி

5வது டெஸ்ட் போட்டி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசியோதெரபிஸ்ட் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என முடிவு வந்தது. எனினும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாக கூறி 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லை, ரத்து செய்துவிடலாம் எனக்கூறி பிசிசிஐ முடிவு செய்தது.

நஷ்டம்

நஷ்டம்

கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளோடு இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இது மட்டுமல்லாமல், இந்திய அணியின் திடீர் முடிவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.304 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒளிபரப்பு உரிமையை பெற்ற நிறுவனத்திற்கு பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். அதே போன்று போட்டி நடைபெறவிருந்த ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானம் 20,000 பேருக்கு மேல் அமர்ந்து பார்க்க கூடியது. 5 நாட்களுக்கான டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே அவர்களுக்கு பணத்தை திரும்பப் பெறும் பணி நடைபெற்று வருகிறது.

 பெரும் பிரச்னை

பெரும் பிரச்னை

இது ஒருபுறம் இருக்க போட்டியின் புள்ளிவிவரங்கள் என்ன என்பது குறித்து மிகப்பெரும் பனிப் போரே நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெறாததால் எந்தவித புள்ளிகளும் வழங்கப்படாமல் 2 - 1 என இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் இந்திய அணி தான் தாமாக முன்வந்து விலகியது, எனவே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரி வருகிறது. அதற்கேற்றார் போல போட்டியின் வெற்றியாளரை நிர்ணயிக்க விசாரணை நடத்த வேண்டும் என ஐசிசிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

பிசிசிஐ-ன் முடிவு

பிசிசிஐ-ன் முடிவு

இந்நிலையில் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுவதற்காக பிசிசிஐ புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது இந்திய அணி அடுத்தாண்டு (2022) ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. எனவே அப்போது மீதமிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியையும் நடத்தி முடித்துவிடலாம் என யோசித்துள்ளது. இதனை இங்கிலாந்து வாரியத்திடமும் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Story first published: Sunday, September 12, 2021, 21:38 [IST]
Other articles published on Sep 12, 2021
English summary
BCCI Plans to reschedule Manchester Test, T20, ODI are additional offer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X