For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாராவின் மாஸ் ஸ்ட்ரைக் ரேட்.. எழுச்சி கண்ட இந்திய அணி.. 3வது நாளில் யாருமே எதிர்பார்க்காத ஆட்டம்!

ஹெட்டிங்லி: 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் கம்பேக் கொடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சொதப்பியது.

புது ரூட் எடுத்த ஜோ ரூட்.. மடக்கிப்பிடித்த இந்தியா.. திடீர் ட்விஸ்ட்.. 2ம்நாளில் சுவாரஸ்ய க்ளைமேக்ஸ்புது ரூட் எடுத்த ஜோ ரூட்.. மடக்கிப்பிடித்த இந்தியா.. திடீர் ட்விஸ்ட்.. 2ம்நாளில் சுவாரஸ்ய க்ளைமேக்ஸ்

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 432 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். 3 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியில் பங்கேற்ற டேவிட் மலான் 70 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை வகித்தது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இதனையடுத்து இன்று இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் மிக மோசமாக சொதப்பியதால், மீண்டும் அதையே செய்வார்கள் என ரசிகர்களிடயே பதற்றம் நிலவி வந்தது. அதற்கேற்றார் போல் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி வந்தனர். 60 பந்துகளுக்கு வெறும் 16 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. பெரும் ஏமாற்றமாக கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சிகொடுத்தார்.

ஹிட் மேன்

ஹிட் மேன்

பின்னர் வந்த புஜாரா - ரோகித் சர்மா ஆகியோர் கூட்டணி சேர்ந்து ரன்களை சீரான வேகத்தில் உயர்த்தினர். சிக்ஸரெல்லாம் அடித்து அசத்திய ரோகித் சர்மா ஒரு கட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 59 ரன்களிலேயே வெளியேறினார். இதன் பின்னர் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

ஃபார்முக்கு திரும்பிய புஜாரா

ஃபார்முக்கு திரும்பிய புஜாரா

நீண்ட நாட்களாக பந்தை மற்றும் வீணடித்துவிட்டு, ரன் குவிக்காமல் இருந்து வந்த சீனியர் வீரர் புஜாரா மீது கடும் விமர்சனங்கள் இருந்தது. ஆனால் இன்று சீரான வேகத்தில் ரன்களை எடுத்தார். அதுவும் குறிப்பிட்ட பந்துகளுக்கு இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டி ரன்களை குவித்தார். முதலில் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த புஜாரா, பின்னர் விராட் கோலியுடன் சேர்ந்து அரைசதம் விளாசினார். அவரின் ஸ்ட்ரைக் ரோட் ஒருகட்டத்தில் 100க்கு சென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆட்ட நேர முடிவு

ஆட்ட நேர முடிவு

மறுமுணையில் பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆடிய கேப்டன் விராட் கோலியும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி 45 ரன்களுடனும், புஜாரா 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்வதற்கு இன்னும் 139 ரன்கள் தேவை.

Story first published: Friday, August 27, 2021, 23:39 [IST]
Other articles published on Aug 27, 2021
English summary
India vs England 3rd test Day 3 stumps, Indian top order batsmens fights back against in 2nd innings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X