For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்னப்பா இப்படி இறங்கிட்டீங்க”.. சிராஜுக்காக ரசிகர்கள் செய்த பிரமாண்ட விஷயம்.. வைரலாகும் புகைப்படம்

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்த இளம் வீரர் முகமது சிராஜை பாராட்டி, அவரின் வீட்டிற்கு அருகில் ரசிகர்கள் செய்துள்ள விஷயம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Mohammed Siraj’s Huge Cutout Established In His Hometown | Oneindia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

 பாரா ஒலிம்பிக்.. ஈட்டி எறிதலில் 3வது தங்கத்தை நோக்கி கவனிக்கப்படாத பாரா ஒலிம்பிக்.. ஈட்டி எறிதலில் 3வது தங்கத்தை நோக்கி கவனிக்கப்படாத

கடைசி நாள் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சொல்லி வைத்து ஒவ்வொரு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களையும் தூக்கி அசத்தினார்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகள் சம பலத்துடனே இருந்தது. அதாவது முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் அவரின் பாட்ஷா பலிக்கவில்லை. அவர்களின் ரன் குவிப்புக்கு முகமது சிராஜ் முட்டுக்கட்டைப் போட்டதால் அந்த அணி 2வது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு சுருண்டது.

சீறிய சிராஜ்

சீறிய சிராஜ்

இந்த 2வது டெஸ்டில் அபாரமாக பந்து வீசிய சிராஜ், 2 இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தினார். அவரின் இளமை துடிப்பும், வேகமும், கோலியின் ஐடியாக்களை செயல்படுத்துவதிலும் மிகச்சிறப்பாக உள்ளதால், முகமது ஷமிக்கு அடுத்ததாக இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

இதனை உறுதி செய்யும் வகையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய பவுலர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்துள்ளார். இதற்கு முன் 1982ல் முன்னாள் கேப்டன் கபில் தேவ் லார்ட்ஸில் 8 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர், 39 ஆண்டுகளாக பல்வேறு வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு கிடைத்த போதும், இதனை செய்ய முடியவில்லை. ஆனால் இன்று சிராஜ் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ரசிகர்களின் செயல்

ரசிகர்களின் செயல்

இந்நிலையில் முகமது சிராஜை பாராட்டும் வகையில், அவரின் சொந்த ஊரான ஐதராபாத் நகரில் மிக பிரமாண்டமான கட் அவுட் ஒன்று நிருவப்பட்டுள்ளது. தான் விக்கெட் எடுத்ததற்கு பிறகு வாயில் விரலை வைத்து 'உஷ்.. அமைதியாய் இரு' என்பது போல் செய்து காட்டுவார். அவரின் அந்த பழக்கம் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாகி வருகிறது. எனவே இந்திய ஜெர்ஸியில் அவர் வாயில் விரலை வைத்திருப்பது போன்றே அந்த கட் அவுட்டும் செய்யப்பட்டுள்ளது.

கொண்டாட்டத்திற்கான விளக்கம்

கொண்டாட்டத்திற்கான விளக்கம்

தனது பழக்கம் குறித்து பேசிய சிராஜ், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் என்னை குறித்து பல விமர்சனங்களை செய்வார்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை போல கிண்டல் செய்வார்கள். எனவே அவர்களுக்கு எனது பந்துவீச்சு பதிலடி கொடுத்து விட்டது, வாயை மூடிக்கொண்டு செல்லுங்கள் எனக் கூறுவதற்காகவே நான் அப்படி செய்கிறேன் என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 21, 2021, 13:21 [IST]
Other articles published on Aug 21, 2021
English summary
Mohammed Siraj’s Fans in Hyderabad erect massive cut-out of him, Pics goes viral on internet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X