For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘தப்பே இல்லப்பா’.. முற்றிய 5வது டெஸ்ட் சர்ச்சை.. முதன்முறையாக வாய் திறந்த ரவி சாஸ்திரி!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் சர்ச்சை குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல் முறையாக வாய் திறந்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பிரச்னை தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்ற சூழலில் 5வது டெஸ்ட் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

கடைசி நேர ஒப்பந்தத்தில் ஜாக்பாட்.. வெஸ்ட் இண்டீஸின் அதிரடி நாயகன்.. தட்டித்தூக்கிய ஐதராபாத் அணி!கடைசி நேர ஒப்பந்தத்தில் ஜாக்பாட்.. வெஸ்ட் இண்டீஸின் அதிரடி நாயகன்.. தட்டித்தூக்கிய ஐதராபாத் அணி!

5வது டெஸ்ட்

5வது டெஸ்ட்

இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நெகடிவ் என முடிவு என வந்தது. எனினும் வீரர்களை போட்டிக்கு களமிறக்குவது ஆபத்தானது எனக்கூறி ஆட்டத்தை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்தது.

கோபத்தில் பிசிசிஐ

கோபத்தில் பிசிசிஐ

இந்திய அணியினர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த இந்திய அணியினர், இந்த பொது நிகழ்ச்சியில் மக்களுடன் பங்கேற்றுள்ளனர். இதற்காக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் பிசிசிஐ-யிடம் எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை எனத் தெரிகிறது. இதே போல இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும் அனுமதி பெறவில்லை. இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

ரவி சாஸ்திரியால் வந்த பிரச்னை தான் 5வது டெஸ்ட் போட்டி ரத்தானதுக்கு முக்கிய காரணமாக கூறி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்திய வீரர்கள் பயோ பபுள் விதிமுறைகளை மீறி வெளியே ஊர் சுற்றி வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

 சாஸ்திரி விளக்கம்

சாஸ்திரி விளக்கம்

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக பேசியுள்ளார். தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர், இங்கிலாந்து நாடு முழுவதுமே எந்தவித லாக்டவுன்களும் இன்றி சுதந்திரமாக தான் உள்ளது. எனவே எது நடைபெறுவதாக இருந்திருந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியின் போது கூட நடந்திருக்கும் எனக்கூறியுள்ளார். இந்த பதிவில், விதிமுறைகளே கடுமையாக இல்லை, பின் எப்போது கொரோனா வந்தது பெரிய விஷயம் இல்லை என்பது போல அவர் பேசியுள்ளார்.

இந்திய அணிக்கு பாராட்டு

இந்திய அணிக்கு பாராட்டு

எனினும் இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையேயும் இந்திய அணியை பாராட்ட ரவி சாஸ்திரி மறக்கவில்லை. இங்கிலாந்தின் கோடைக்கால கிரிக்கெட்டில், இந்திய அணி கொடுத்த சிறப்பான ஆட்டத்தை போன்று வேறு ஆட்டம் அமைந்திருக்காது. இந்திய வீரர்கள் அவ்வளவு அற்புதமாக விளையாடி இருந்தனர். இந்த கொரோனா காலத்தில் இந்திய அணியை போல எந்த அணியும் சிறப்பாக செயல்படவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களே அதற்கு சான்று என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, September 12, 2021, 21:16 [IST]
Other articles published on Sep 12, 2021
English summary
India's Head Coach Ravi Shastri’s Explanation for attending book launch function and allegations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X