‘ஒன்னுமே சரியில்ல.. பேட் ஒரு பக்கம் இருக்கு.. கால் ஒரு பக்கம் இருக்கு’... கோலியை விளாசிய கவாஸ்கர்!

லார்ட்ஸ்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருவது குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Sunil Gavaskar Sceptical On Kohli's Form, Gives Tips To Solve Batting Problem

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் தனது 3வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் 1986 மற்றும் 2014 ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது.

ஒரே இன்னிங்ஸில் 13 நோ-பால்.. பும்ரா இப்படி வீசியது ஏன்? மனநிலை மாற்றமா? - ஜாகீர் கான் விளக்கம்ஒரே இன்னிங்ஸில் 13 நோ-பால்.. பும்ரா இப்படி வீசியது ஏன்? மனநிலை மாற்றமா? - ஜாகீர் கான் விளக்கம்

2வது டெஸ்டில் ஏமாற்றம்

2வது டெஸ்டில் ஏமாற்றம்

இந்திய அணியில் பல்வேறு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கேப்டன் விராட் கோலியின் ஃபார்ம் மட்டும் இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அவர், கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் படு மோசமாக திணறி வருகிறார்.

கோலி மோசமான ஃபார்ம்

கோலி மோசமான ஃபார்ம்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் கோலி ஓராண்டுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்ததே அவரின் கடைசி சதமாக உள்ளது. 2021ஆம் ஆண்டில் தற்போதுவரை 6 டெஸ்ட்களில் விளையாடியுள்ள விராட் கோலி 2 அரை சதம் மட்டும் அடித்து 229 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். வழக்கமாக 40க்கு மேல் இருக்கும் அவரின் சராசரி தற்போது 25 ஆகவே உள்ளது.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

2018ஆம் ஆண்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதம், 2 அரை சதம் உட்பட 1036 ரன்கள் குவித்திருந்தார். ஆனால் 2019ஆம் ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்களுடன் 612 ரன்களும், 2020ஆம் ஆண்டில் 3 டெஸ்ட்களில் வெறும் 116 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 2021-ல் தற்போது வரை 2 அரைசதத்துடன் 229 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே அவரின் ரன்களில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டு வருகிறது.

கவாஸ்கர் அதிருப்தி

கவாஸ்கர் அதிருப்தி

இந்நிலையில் கோலியின் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளாஅர். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் சாம் கரன் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்த விதம் எனக்கு அதிர்ச்ச்சியாக இருந்தது. வைட் லெந்த்தில் போடப்பட்ட பந்தை கோலி அடிக்க நினைத்து அவுட்டானார். டெஸ்டில் 8000 ரன்களை கடந்த வீரர் ஒருவர், அதுவும், அவுட் சைட் ஸ்டம்பை சிறப்பாக கையாள கூடிய கோலி, அவுட்டானது அவரின் மோசமான ஆட்டத்தை காட்டுகிறது.

சரியா விளையாடல

சரியா விளையாடல

அந்த பந்திற்கு அவர் சரியான டைமிங் இல்லாமல், சற்று விரைவாகவே பேட்டை ஓங்கி விட்டார். அவரின் கால் ஒரு இடத்தில் உள்ளது, அவரின் பேட் ஒருபுறம் உள்ளது. அதாவது கோலி சரியான டெக்னிக்களில் விளையாடவில்லை. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பேட்டிங் செய்யும் சூழல் மாறுபடலாம். ஆனால் டெஸ்டில் பழைய முறை தான் என்றும் கைக்கொடுக்கும். விராட் அதனை புரிந்துக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார்.

கோலியின் அனுபவம்

கோலியின் அனுபவம்

முதல் 2 டெஸ்ட்களில் கோலி சோபிக்காவிட்டாலும், அடுத்து உள்ள 3 டெஸ்ட்களிலும் பெரிய தாகக்த்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்தில் இதற்கு முன்னர் கோலிக்கு இருந்த ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இருந்தது தான். விராட் கோலி இதுவரை 2 முறை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளார். 2014ம் ஆண்டு நடந்த முதல் சுற்றுப்பயணத்தில் விராட் கோலி 10 இன்னிங்ஸ்களில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதன் பிறகு கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் கோலி அதிரடி காட்டினார். மொத்த 5 போட்டிகளில் விளையாடிய அவர் 593 ரன்களை குவித்தார். இதில் 2 சதமும், 3 அரைசதமும் அடங்கும். எனவே அடுத்த டெஸ்டில் கோலியின் சதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 7 - October 20 2021, 03:30 PM
Namibia
Netherlands
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sunil Gavaskar feels Virat Kohli is not playing well currently, there is a big technical glitch
Story first published: Wednesday, August 18, 2021, 11:49 [IST]
Other articles published on Aug 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X