
பயிற்சி ஆட்டம்
இங்கிலாந்து களத்தில் சுமார் ஓராண்டுக்கு பின்னர் இந்திய அணி விளையாடுகிறது. இதே போல கடந்த 3 மாதங்களாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டே விளையாடவில்லை. எனவே இதனை மனதில் வைத்து பயிற்சி போட்டிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. ஜூன் 24ம் தேதி கவுண்டி அணிக்கும் இந்திய அணிக்கும் 4 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

திடீர் ட்விஸ்ட்
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி போட்டி திடீரென ஒருநாளுக்கு முன்னதாக இன்று ( ஜூன் 23 ) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளனர். இதற்கு மழைப்பொழிவு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

என்ன காரணம்
போட்டி நடைபெறும் லெய்செஸ்டர்சையர் நகரத்தில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக கடைசி நாளான 28ம் தேதி அதிக வாய்ப்புள்ளதாம். எனவே போட்டியை முழுவதுமாக நடத்துவதற்காக தான் போட்டி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

எப்படி பார்க்கலாம்
இரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாது. ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதில் ரோகித் சர்மாவின் தலைமை முழு படையும் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.