“இது உங்களுக்கு தேவையா??”.. விராட் கோலியை தவறாக பேசிய சேவாக்.. நேரலையின் போது புதிய சர்ச்சை - வீடியோ

பெர்மிங்கம்: இந்திய அணி வீரர் விராட் கோலி குறித்து மோசமாக பேசிய விரேந்திர சேவாக் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்களை சேர்க்க, இங்கிலாந்து அணி 284 ரன்களுக்குள் சுருண்டது.

புதிய சர்ச்சை

டெஸ்ட் கிரிக்கெட் என்றால் விராட் கோலியின் சர்ச்சை என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த போட்டியிலும் கோலி சண்டைகள் பார்க்க முடிந்தது. இங்கிலாந்து அணி இன்னிங்ஸின் போது, ஜானி பேரிஸ்டோ மற்றும் கோலி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 என்ன ஆனது?

என்ன ஆனது?

இந்நிலையில் கோலியை வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் விரேந்திர சேவாக். இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை எடுத்த போது, இந்திய வீரர்கள் உற்சாகத்தில் கொண்டாடினர். அப்போது விராட் கோலியும் தனக்கே உரிய பாணியில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது கோலி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

சேவாக் கிண்டல்கள்

சேவாக் கிண்டல்கள்

ஆனால் கமெண்ட்டேட்டரியில் இருந்த விரேந்திர சேவாக், " விராட் கோலியின் செய்வதை பார்க்கும் போதெல்லாம் மிக அறுவருப்பாக உள்ளது. அவரை அணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என கூறினார். இதனை நேரலையில் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சேவாக்கிற்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ரோகித்தை கிண்டல்

ரோகித்தை கிண்டல்

சேவாக்கிற்கு இது போன்ற சர்ச்சைகள் புதிதல்ல, சமீபத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை மும்பையின் "வடப்பா" என கிண்டலடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியத நிலையில் தற்போது விராட் கோலியை சீண்டிப்பார்த்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கப்படுமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sehwag's controversial tweet on Virat kohli ( விராட் கோலி குறித்து சேவாக் விமர்சனம் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி குறித்து சேவாக் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Story first published: Monday, July 4, 2022, 10:07 [IST]
Other articles published on Jul 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X