For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பிரமாஸ்திரம் ரெடி.. முக்கிய ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்திய அணி.. 5வது டெஸ்டில் தப்பிக்குமா?

பெர்மிங்கம்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஒரு பிரமாஸ்திரம் கிடைத்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கெல்லாம் சுருண்டது.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியாஇங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியா

இந்திய அணியின் ஸ்பெஷல்

இந்திய அணியின் ஸ்பெஷல்

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 ரன்கள் இலக்காக நிர்ணயித்து இதுவரை தோல்வியை ஒருமுறை கூட சந்தித்தது கிடையாது. இந்த நம்பிக்கையில் தான் 378 ரன்கள் இலக்காக வைத்தும், ரசிகர்கள் தைரியமாக இருந்தனர். ஆனால் 4ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களின் கனவை தகர்த்துள்ளனர்.

அதிக வெற்றி வாய்ப்பு

அதிக வெற்றி வாய்ப்பு

தற்போது வரை இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. ஜோ ரூட் 76 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோ 72 ரன்களுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் உள்ளனர். கடைசி நாள் ஆட்டமான இன்று இங்கிலாந்து அணி இன்னும் 119 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்றிவிடும். இதனால் இந்திய ரசிகர்கள் சோகமாக உள்ளனர்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு பிரமாஸ்திரம் கிடைத்துள்ளது. அதாவது இரு அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்ளவுள்ளார். பும்ராவின் பவுலிங் வியூகங்கள் சொதப்பிய சூழலில் இன்று ரோகித் சர்மா டக் அவுட்டில் இருந்து அணியின் பவுலிங் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

என்ன பலன்

என்ன பலன்

மிகக்குறைந்த இலக்கு அல்லது இக்கட்டான சூழல்களில் அணியை வித்தியாசமான வியூகங்கள் மூலம் வெற்றிக்கு அழைத்து செல்வதில் தோனிக்கு பிறகு, ரோகித் சர்மா சிறப்பாக செய்துள்ளார். எனவே அவரின் ஃபீல்ட் செட்டிங் மற்றும் பவுலிங் ரொட்டேஷன்கள் தான் இன்றைய போட்டியில் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உதவும் வகையில் மழைக்கான வாய்ப்பும் இருப்பதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையலாம்.

Story first published: Tuesday, July 5, 2022, 15:42 [IST]
Other articles published on Jul 5, 2022
English summary
India vs England 5th day test ( இந்தியா vs இங்கிலாந்து 5ம் நாள் ஆட்டம் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி கடைசி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X