தரமான சம்பவம் வெயிட்டிங்.. பாண்ட்யா கையில் கிடைத்த 2 பெரும் ஆயுதங்கள்.. அதிர்ந்த அயர்லாந்து அணி!

டுப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒரு தரமான சம்பவத்தை செய்வதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே 2 போடிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.

இதில் முதல் டி20 போட்டி நாளை இரவு டப்ளிங்னில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மாற்றம்.. கேஎஸ் பரத்துக்கு அடித்த லக்..பயிற்சி ஆட்டத்தில் முயற்சிஇந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மாற்றம்.. கேஎஸ் பரத்துக்கு அடித்த லக்..பயிற்சி ஆட்டத்தில் முயற்சி

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் இங்கிலாந்து தொடருக்காக சென்றுள்ள நிலையில் அயர்லாந்து தொடருக்காக மற்றொரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணைக்கேப்டனாகவும் செயல்படவிருக்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக்கின் கேப்டன்சி ஒருபுறம், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ள அயர்லாந்து மறுபுறம் என கலைக்கட்டியுள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் முதல் டி20 போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் குறித்த தெரியவந்துள்ளது. போட்டி நடைபெறும் தி வில்லேஜ் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு உதவக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே நல்ல அதிரடி காட்டினால் 170+ ரன்கள் மிக சுலபமாக வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ரெக்கார்ட்

இந்திய அணி ரெக்கார்ட்

இதற்கு முன்னர் 2 முறை இதே மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ளது. இரண்டு முறையுமே இந்திய அணி ( 208, 218 ) 200 ரன்களுக்கு மேல் தான் ரன் குவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரோகித் சர்மா தான். அவர் தான் அயர்லாந்து களத்தில் வெற்றிகரமான இந்திய பேட்ஸ்மேனாக உள்ளார். அவரின் இடத்தை இஷான் கிஷான் தான் பூர்த்தி செய்ய வேண்டும்.

 பவுலிங் படை

பவுலிங் படை

இதே போல பவுலிங்கில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஜொலிக்கின்றனர். இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும், யுவேந்திர சாஹல் 6 விக்கெட்களையும் சாய்த்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Ireland 1st ( இந்தியா vs அயர்லாந்து போட்டி ) அயர்லாந்து போட்டிக்கான பிட்ச் ர்போர்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 பெரும்தூண்கள் உள்ளனர்.
Story first published: Saturday, June 25, 2022, 16:47 [IST]
Other articles published on Jun 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X