For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்

டுபிளின்: இந்தியா, அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை (26ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரவு 9 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முதல் தர இந்திய அணியை பிசிசிஐ அனுப்பியுள்ள நிலையில், ஓயிட் பால் நட்சத்திரங்களை அயர்லாந்து தொடரில் களமிறக்கியுள்ளது.

இந்த நிலையில், முதல் டி20 போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும், வானிலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பெஞ்ச் பலத்தை சோதிக்கவே நட்சத்திர வீரர்கள் இல்லாமல், பிசிசிஐ இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. இதில், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாத சூரியகுமார் தற்போது திரும்பியுள்ளதால் அனைவரின் கவனமும், அவர் மீது திரும்பியுள்ளது. இதே போன்று சஞ்சு சாம்சனுக்கும் நடுவரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படலாம்.

India vs Ireland 1st t20I- Playing xi – Preview and prediction- Pitch weather report

இதே போன்று பந்துவீச்சில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக், ஆர்ஷ்தீப் சிங்கிற்கு பிளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியா வாய்ப்பு தரலாம். டுபிளின் பிட்ச் பொறுத்தவரை பந்து, பேட்டிற்கு நன்கு வரும். இதனால் ரேன் குவிப்பிற்கு சாதகமான மைதானமாக டுபிளின் ஆடுகளம் இருக்கும்.

இந்திய அணி கடைசியாக இங்கு இரு முறை டி20 போட்டியில் விளையாடிய போதும், 200 ரன்களுக்கு மேல் அடித்தது. இதே போன்று வானிலையும் மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.மழையால் போட்டிக்கு பெருமளவு பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்து அணியை பொறுத்தவரை கடந்த 12 மாதத்தில் டி20 தொடரில் ஜிம்பாப்வேவை மட்டுமே வீழ்த்தியது. கேப்டன் ஆண்டிரு பால்பரின்,பாவுல் ஸ்டேர்லிங்,ரி டெக்டார் ஆகியோர் அயர்லாந்து அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

பிளேயிங் லெவன்

1.இஷான் கிஷன். 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3. சூர்யகுமார், 4.சஞ்சு சாம்சன், 5,ஹர்திக் பாண்டியா, 6.தினேஷ் கார்த்திக், 7.அக்சர் பட்டேல், 8. ஹர்சல் பட்டேல், 9,புவனேஸ்வர் குமார்/ ஆர்ஸ்தீப் சிங், 10, ஆவேஷ் கான் / உம்ரான் மாலிக், 11.சாஹல்

நேரம்- இரவு 9 மணி

சேனல்- சோனி டென் 1, சோனி சிக்ஸ்

26 ஆண்டுக்கு முன் வந்த அதே நிலைமை.. மோசமான சாதனையை படைக்கும் இந்தியா??.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! 26 ஆண்டுக்கு முன் வந்த அதே நிலைமை.. மோசமான சாதனையை படைக்கும் இந்தியா??.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

Story first published: Saturday, June 25, 2022, 23:10 [IST]
Other articles published on Jun 25, 2022
English summary
India vs Ireland 1st t20I- Playing xi – Preview and prediction- Pitch weather report மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X