அதிரடி காட்டிய அயர்லாந்து.. ஒரே ஒரு பவுண்டரியால் மாறிய ஆட்டம்..இந்தியா பக்கம் ஆட்டம் சென்றது எப்படி?

டுபிளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

IRE vs IND Umran Malik-ன் கடைசி ஓவர்! Ireland சிறப்பான ஆட்டம் | *Cricket

இந்திய அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்ததும், வெற்றி நிச்சயம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அயர்லாந்து அணி, தங்களது அதிரடியால் இந்தியாவுக்கு கடைசி வரை கடும் நெருக்கடி அளித்தது.

யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்புயாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்பு

சொல்லப் போனால், போட்டியில் பெரும்பாலான பகுயில் அயர்லாந்து அணியே, இந்தியாவை காட்டிலும் முன்னிலையில் இருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது

வெற்றியை தீர்மானிப்பது

இருப்பினும், இந்தியா வெற்றி பெற்றது ஆச்சரியம் தான். 226 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது வெற்றியை தீர்மானிப்பது பவுண்டரிகளும், சிக்சரும் தான். தோனி சொல்வது போல், சிக்சர் போவதற்கு பதில் பவுண்டரிகளையாவது கொடுங்கள். நீங்கள் 2 ரன்கள் மிச்சப்படுத்தினீர்கள் என்று அர்த்தம் என்று கூறுவார். நேற்று இந்திய அணி அதை தான் செய்தது.

வெற்றியின் வித்தியாசம்

வெற்றியின் வித்தியாசம்

கடைசி 5 ஓவரில் அயர்லாந்து அணிக்கு 62 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்தியா பவுண்டரிகளை அடிக்க விடாமல் தடுத்தது. கடைசி 5 ஓவரில் அயர்லாந்து அணி 6 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் மட்டுமே அடித்தது. இந்திய அணி தனது பேட்டிங்கில் 11 சிக்சரும், 22 பவுண்டரிகளும் அடித்தது. அயர்லாந்து அணியோ 11 சிக்சர்களையும், 21 பவுண்டரிகளையும் விளாசியது. அந்த ஒரு பவுண்டரி வித்தியாசம் தான் 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து தோற்றதுக்கு காரணமாக அமைந்தது.

திருப்புமுனை

திருப்புமுனை

இதனால் தான் அக்சர் பட்டேலின் 2 ஓவரின் 12 ரன்கள், உம்ரான் மாலிக்கின் கடைசி ஓவர், புவனேஸ்வர் குமாரின் 18வது ஓவர் முடிவில் 7 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தது ஆகியவை போட்டியில் திருப்புமுணையை ஏற்படுத்தியது, குறிப்பாக, கடைசி ஓவரில் 17 ரன்கள் கையிருப்பு இருந்த நிலையில், உம்ரான் மாலிக் எதை பற்றியும் கவலைப்படாமல் வேகமாக பந்துவீசி நெருக்கடி அளித்தார்.

ஹர்திக் அசத்தல் முடிவு

ஹர்திக் அசத்தல் முடிவு

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷியில் சில தவறுகள் இருந்தாலும், ராகுல் , ரிஷப் பண்டை ஓப்பிட்டால், இவரது கேப்டன்ஷி மிகவும் நன்றாகவே உள்ளது. அக்சர் பட்டேலுக்கு கூடுதல் ஒரு ஓவர் வழங்கி எதாவது ஒரு வேகப்பந்துவீச்சாளரின் ஓவரை குறைத்திருக்கலாம். ஆனால் கடைசி ஓவரை சுழற்பந்துவீச்சுக்கு தராமல், வேகப்பந்துவீச்சுக்கு சென்றது நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Ireland 2nd t20 – How india won despite conceding 11 sixers அதிரடி காட்டிய அயர்லாந்து.. ஒரே ஒரு பவுண்டரியால் மாறிய ஆட்டம்.. இந்தியா பக்கம் ஆட்டம் சென்றது எப்படி?
Story first published: Wednesday, June 29, 2022, 9:09 [IST]
Other articles published on Jun 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X