For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா.. அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்.. பிசிசிஐ ப்ளான் என்ன தெரியுமா?

மும்பை: இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

தேர்வுக்குழுவின் மெகா தவறு.. ரோகித் சர்மா விசயத்தில் கோட்டைவிட்டார்கள்.. சேவாக் காட்டமான விமர்சனம்தேர்வுக்குழுவின் மெகா தவறு.. ரோகித் சர்மா விசயத்தில் கோட்டைவிட்டார்கள்.. சேவாக் காட்டமான விமர்சனம்

அடுத்த டி20 கேப்டன்

அடுத்த டி20 கேப்டன்

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பேசப்பட்டு வருகிறார். தற்போது இந்திய அணியின் 3 வடிவ அணிக்கும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு காயம், ஓய்வு என அடிக்கடி வருவதால், இந்திய அணியின் தொடர்களில் புது, புது கேப்டன்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஏமாற்றிய 2 வீரர்கள்

ஏமாற்றிய 2 வீரர்கள்

தென்னாப்பிரிக்க தொடரில் கே.எல்.ராகுலின் கேப்டன்சி விமர்சனத்திற்கு உள்ளானது. இதே போல ரிஷப் பண்ட் மிகவும் இளம் வீரராக இருப்பதால், பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. எனவே அடுத்தக்கட்ட முயற்சியாக ஹர்திக் பாண்ட்யா தான் பிசிசிஐ-ன் தேர்வாக இருந்து வருகிறார்.

அதிகாரியின் விளக்கம்

அதிகாரியின் விளக்கம்

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், ரோகித் சர்மாவை தற்போதைக்கு மாற்றுவதாக இல்லை. அதே நேரம் அவரின் பனிச்சுமையை சரிசெய்வது முக்கியமான ஒன்றாக உள்ளது. சிறிய சுற்றுப்பயணங்கள் நிறைய உள்ளது. அதற்கு ஹர்திக் பாண்ட்யா தான் எங்களின் திட்டத்தில் உள்ளார். இனி ரோகித் இல்லையெனில் பாண்ட்யா தான் கேப்டனாக செயல்படுவார்.

ரோகித் எதற்காக?

ரோகித் எதற்காக?

தற்போது கேப்டன் பதவிக்கு நிறைய வீரர்கள் உள்ளார்கள் தான். ஆனால் அனைவரையும் தயார் படுத்த வேண்டியுள்ளது. இதனால் தான் ரோகித் வேண்டும் எனக்கூறுகிறோம். பெரிய தொடர்களில் ரோகித்தின் பேட்டிங் மற்றும் அனுபவமிக்க கேப்டன்சி தேவைப்படுகிறது என அதிகாரி கூறியுள்ளார்.

Story first published: Monday, June 27, 2022, 20:00 [IST]
Other articles published on Jun 27, 2022
English summary
Hardik pandya Captaincy ( இந்தியா vs அயர்லாந்து டி20 தொடர் ) இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா முழு நேரமாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X