For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட.. 2000 கேட்டா.. முட்டையைக் கொடுத்திட்டாரே இந்த கோஹ்லி!

டப்ளின்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி ஒரு புதிய சாதனையைப் படைப்பார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டார்.

இந்தியா - அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி டப்ளின் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அழகாக வெற்றி பெற்றது இந்தியா. இந்தப் போட்டியில் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை அவர் தவற விட்டு விட்டார்.

India vs Ireland T20: Kohli fails to slam new record

தற்போது சர்வதேச டி 20 போட்டிகளில் 1983 ரன்களைக் குவித்துள்ளார் கோஹ்லி. நேற்று அவர் 17 ரன்களை எடுத்திருந்தால் அதி வேகமாக டி 20 போட்டிகளில் 2000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.

தற்போது டி20 போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் அதற்கு மேல் குவித்த வீரர்கள் இருவர்தான் உள்ளனர். அதில் முன்னணியில் இருப்பவர் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் (68 இன்னிங்ஸ்). இவர் 2271 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் இருப்பவர் நி்யூசிலாந்தின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம். இவர் எடுத்திருப்பது 2140 (66 இன்னிங்ஸ்கள்) ஆகும். பாகிஸ்தானின் சோயப் மாலிக் 1989 ரன்கள் எடுத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் கோஹ்லி புதிய சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் கோஹ்லி டக் அவுட் ஆகிவிட்டார். இதனால் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாகி விட்டது. ஆனால் சாதனைக்கான வாய்ப்பு இன்னும் போகவில்லை. அடுத்த போட்டியில் கோஹ்லி இந்த சாதனையைப் படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, June 28, 2018, 10:53 [IST]
Other articles published on Jun 28, 2018
English summary
Team India captain Virat Kohli has missed a new batting record during the T20 match against Ireland in Dublin Yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X