For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா -நியூசிலாந்து ஒருநாள் தொடர் : மறுபடியும் வடை போயிடுமோ... தவிப்பில் நியூசிலாந்து அணி...

Recommended Video

Quick Single: Sports news 04-02-2020 | Hetmyer ruled out | Ronaldo's instagram

ஹாமில்டன் : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹாமில்டனின் செடன் பார்க்கில் நாளை துவங்கவுள்ளது. இரு அணிகளும் மோதிய முதல் சர்வதேச டி20 தொடரை இந்தியாவிடம் பறிகொடுத்த நியூசிலாந்து அணி அடுத்ததாக ஒருநாள் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச ஒருநாள் தொடரில் தோள்பட்டை காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவிடம் முதல் தொடரை இழந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் வெல்ல நியூசிலாந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கேன் வில்லியம்சன் முதல் 2 போட்டிகளில் இடம்பெறாதது அந்த அணியின் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடுகிறேன் - விராட்வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடுகிறேன் - விராட்

சர்வதேச ஒருநாள் போட்டிகள்

சர்வதேச ஒருநாள் போட்டிகள்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, கடந்த 24ம் தேதி முதல் விளையாடிய சர்வதேச டி20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், நாளை முதல் நியூசிலாந்துடன் சர்வதேச ஒருநாள் போட்டி தொடரில் மோதவுள்ளது. முதல் தொடரை இந்தியாவிடம் இழந்துள்ள நியூசிலாந்து அணி, இந்த தொடரில் வெல்ல தீவிரம் காட்டி வருகிறது.

சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன்

சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணி சர்வதேச டி20 தொடரில் இந்தியாவிடம் 5க்கு 0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. 5 போட்டிகளில் இரண்டு போட்டிகளை இரு அணிகளும் சமன் செய்து சூப்பர் ஓவரில் ஆடி பரபரப்பை ஏற்படுத்தின. ஆயினும் இந்தியாவிடம் வெற்றி பெற நியூசிலாந்து அணி தவறியது. இந்தியாவுடனான இந்த போட்டிகளில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தன்னுடைய பங்கை சரிவர செய்தார். ஒரு போட்டியில் 95 ரன்களை அவர் எடுத்தும் வெற்றிக்கனியை அவர் தலைமையிலான அணி பறிக்க முடியவில்லை.

ஹாமில்டனில் முதல் போட்டி

ஹாமில்டனில் முதல் போட்டி

இந்நிலையில் அடுத்ததாக இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் போட்டி தொடர் நாளை முதல் துவங்கவுள்ளது. ஹாமில்டனின் செடன் பார்க்கில் இதன் முதல் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இரு அணிகளிலும் மாற்றங்கள்செய்யப்பட்டுள்ளன.

கேன் வில்லியம்சன் நீக்கம்

கேன் வில்லியம்சன் நீக்கம்

இந்தியாவுடனான இந்த இரண்டாவது தொடரில் கேப்டன் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. கடந்த சர்வதேச டி20 போட்டிகளின்போது இவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக டாம் லாதம் அணியை வழிநடத்துவார் என்று நியூசிலாந்து தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிசியோ விஜய் வல்லப் அறிவிப்பு

பிசியோ விஜய் வல்லப் அறிவிப்பு

கேன் வில்லியசனின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளது. அவர் நன்றாக உள்ளார். ஆனால் சில தினங்களுக்கு தோள்பட்டைக்கு அதிக வேலை கொடுக்காமல், ஒய்வு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதால் முதல் இரண்டு போட்டிகளை அவர் விளையாட மாட்டார் என்றும் மவுண்ட் மாங்கானுய்யில் நடைபெறும் 3வது போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் அணியின் பிசியோ விஜய் வல்லப் தெரிவித்துள்ளார்.

ஓய்வு அவசியம்

ஓய்வு அவசியம்

இந்தியா உள்ளிட்ட அணிகளுடன் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து அணி மோதவுள்ளதால், கேன் வில்லியம்சனுக்கு இந்த நேரத்தில் ஓய்வு அளிக்க வேண்டியுள்ளதாக அணியின் தேர்வாளர் கவின் லார்சன் தெரிவித்தார். பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அணியில் மார்க் சாப்மன் இடம்பிடிப்பு

அணியில் மார்க் சாப்மன் இடம்பிடிப்பு

இந்நிலையில் நியூசிலாந்து ஏ அணியில் இடம்பெற்றுள்ள மார்க் சாப்மன் இந்தியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளதாக கவின் லார்சன் தெரிவித்துள்ளார். இந்தியா ஏ அணிக்கு எதிராக சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய மார்க் சாப்மனை அணிக்காக தேர்வு செய்தது மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Story first published: Tuesday, February 4, 2020, 14:08 [IST]
Other articles published on Feb 4, 2020
English summary
Tom Latham to lead New Zealand team in Kane Williamson's absence
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X