For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா! ஒரு அரைசதம் போட்டாச்சு.. இனிமே முரளி விஜய் நிம்மதியா இருக்கலாம்

Recommended Video

அரை சதம் அடித்தார் முரளி விஜய், ரஹானே பொறுப்பான ஆட்டம்- வீடியோ

மவுன்ட் மௌன்கானி : இந்திய ஏ அணி, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ஒரு பயிற்சி போட்டியில் ஆடியது.

இந்த நான்கு நாள் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் மாற்றி மாற்றி ரன் மழை பொழிந்தன.

இந்த போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் முரளி விஜய் அரைசதம் அடித்து நிம்மதி அடைந்துள்ளார். முதல் இன்னிங்க்ஸில் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடிய நிலையில், முரளி விஜய் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தார்.

முரளி விஜய் நிரூபித்தார்

முரளி விஜய் நிரூபித்தார்

முரளி விஜய் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாதியில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், இங்கிலாந்தின் உள்ளூர் அணியான எசக்ஸ் அணியில் இணைந்து ரன் குவித்து தன் பார்மை நிரூபித்தார். தன்னால் இங்கிலாந்து பிட்சில் ரன் குவிக்க முடியும் என தேர்வுக் குழுவிற்கு காட்டினார்.

முரளி விஜய், ரஹானே சொதப்பினர்

முரளி விஜய், ரஹானே சொதப்பினர்

இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னர் இந்தியா ஏ அணி, நியூசிலாந்து ஏ அணியை பயிற்சி போட்டியில் சந்தித்தது. இதற்கான அணியில் இளம் வீரர்கள் குழுவோடு மூத்த வீரர்கள் முரளி விஜய் மற்றும் ரஹானே இடம் பெற்றனர். இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் பலர் முதல் இன்னிங்க்ஸில் அரைசதம் அடித்தனர். மூத்த வீரர்கள் முரளி விஜய் மற்றும் ரஹானே ரன் அடிக்காமல் சொதப்பினர்.

இளம் வீரர்கள் கலக்கல்

இளம் வீரர்கள் கலக்கல்

முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியில் ப்ரித்வி ஷா 62, மாயங்க் அகர்வால் 65, ஹனுமா விஹாரி 86, பார்த்திவ் பட்டேல் 94, விஜய் ஷங்கர் 62, கிருஷ்ணப்பா கௌதம் 47 ரன்கள் எடுத்தனர். இந்தியா 467 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியில் ஹமீஸ் 114, வில் யங் 49, கிளீவர் 53, டக் ப்ரெஸ்வெல் 48, செல்த் ரான்ஸ் 69 ரன்கள் அடிக்க, அந்த அணி 458 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

முரளி விஜய் அரைசதம்

முரளி விஜய் அரைசதம்

இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கிய இந்திய அணியில் முரளி விஜய் நிதான ஆட்டத்தை ஆடி 60 ரன்கள் அடித்து தன் பார்மை நிரூபித்தார். ரஹானே 41 ரன்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இரண்டாம் இன்னிங்க்ஸிலும் இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பில் கலக்கினர். ப்ரித்வி 50, மாயங்க் 42, ஹனுமா விஹாரி 51 என எடுத்தனர்.

அணித் தேர்வில் குழப்பம்

அணித் தேர்வில் குழப்பம்

அடுத்து ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் ஆடவுள்ள இந்திய அணியில் யாரை எடுப்பது, யாரை விடுப்பது என்ற கடுமையான குழப்பத்தை உண்டாக்கி உள்ளது இந்த பயிற்சி போட்டி. மூத்த வீரர்கள் முரளி விஜய், ரஹானே போராடி ரன் குவித்து தங்கள் இடத்தை காப்பற்றிக் கொண்டுள்ளனர். ஒருவேளை இரண்டாம் இன்னிங்க்ஸில் அவர்கள் ரன் குவிக்காமல் போய் இருந்தால் டெஸ்ட் அணியில் ஆடுவது கடினமாகி இருக்கும்.

[ஏன்பா முரளி விஜய், ரஹானே!! கிடைச்ச வாய்ப்பை கோட்டை விட்டுட்டு டீம்ல இடம் கொடுக்க மாட்றாங்கனா எப்படி?]

Story first published: Monday, November 19, 2018, 11:00 [IST]
Other articles published on Nov 19, 2018
English summary
India A vs New Zealand A practice match score and results - match drawn
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X