வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாம போய்க்கிட்டே இருக்கணும் -விராட் கோலி

ஆக்லாந்து : வெற்றி -தோல்வி குறித்து கவலைப்படாமல் இந்திய அணியை முன்னேற்றி செல்வதிலேயே தான் கவனமாக உள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் சர்வதேச டி20 தொடர் நாளை ஆக்லாந்தில் துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர் என்றும் அவர் தன்னுடைய அணி வீரர்கள் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டி20 தொடர் நாளை துவக்கம்

சர்வதேச டி20 தொடர் நாளை துவக்கம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் முகாமிட்டுள்ளது.

பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறப்பு

பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறப்பு

சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் நாளை துவங்கவுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, இரு அணிகள் குறித்தும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அணியை முன்னேற்றுவதில் கவனம்

அணியை முன்னேற்றுவதில் கவனம்

வெற்றி -தோல்வி குறித்து கவலை கொள்ளாமல் அணியை முன்னேற்றுவதிலேயே தன்னுடைய கவனம் உள்ளதாகவும், வெற்றி, தோல்வி கேப்டன்களின் திறமையை தீர்மானிப்பதில்லை என்றும் கோலி தெரிவித்துள்ளார்.

படுதோல்வியடைந்த நியூசிலாந்து

படுதோல்வியடைந்த நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து படுதோல்வியடைந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

"அணியை சிறப்பாக வழிநடத்துகிறார்"

இந்நிலையில் போட்டி முடிவுகளை கொண்டு கேப்டனின் திறமைகளை தீர்மானிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ள விராட் கோலி கேன் வில்லியம்சன் தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கேன் வில்லியம்சன் குறித்து கோலி

கேன் வில்லியம்சன் குறித்து கோலி

கேன் வில்லியம்சன் தன்னுடைய அணி வீரர்களின் மீது தனிப்பட்ட மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

"கேப்டனின் தோல்வியாக பார்க்கக்கூடாது"

ஒரு அணியிடம் தோல்வியடையும்போது அதை அணியின் மொத்தமான தோல்வியாக பார்க்க வேண்டும் என்றும் தனிப்பட்ட முறையில் கேப்டனின் தோல்வியாக பார்க்கக்கூடாது என்றும் கோலி மேலும் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli said his focus is to take the Indian team forward
Story first published: Thursday, January 23, 2020, 13:06 [IST]
Other articles published on Jan 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X