For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியில் மீண்டும் இணைந்த டிரெண்ட் போல்ட்... கைல் ஜாமிசனும் இணைகிறார்

Recommended Video

IND VZ NZ TEST SERIES | New Zealand announce their squad for India Tests

வெல்லிங்டன் : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இரு அணிகளும் தலா ஒரு தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன.

வரும் 21ம் தேதி வெல்லிங்டனில் முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கூடுதல் புள்ளிகளை பெறும் என்பதால் இதில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக முந்தைய தொடர்களில் இடம்பெறாமல் ஓய்வுபெற்றுவந்த டிரெண்ட் போல்ட் இணைகிறார். மேலும் கடந்த ஒருநாள் தொடரில் விளையாடிய கைல் ஜாமிசனும் இந்த தொடரில் இணைந்து விளையாடவுள்ளார்.

2 தொடர்கள் நிறைவு

2 தொடர்கள் நிறைவு

நியூசிலாந்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. அதை தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் நியூசிலாந்தால் இந்தியா ஒயிட்வாஷ் செய்யப்பட்டது.

21ம் தேதி முதல் போட்டி

21ம் தேதி முதல் போட்டி

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21ம் தேதி வெல்லிங்டனில் துவங்க உள்ளது. 24ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த தொடரின் அடுத்த போட்டி 29ம் தேதி துவங்கி 4ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுவதன்மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மேலும் அதிக புள்ளிகளை பெறமுடியும் என்பதால் இதில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.

டிரெண்ட் போல்ட் இணைப்பு

டிரெண்ட் போல்ட் இணைப்பு

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் கொண்ட இந்த பட்டியலில் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கையில் காயம் ஏற்பட்டு இவர் விலகிய நிலையில், கடந்த இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இடம்பெறாமல் இருந்த இவர், தற்போது டெஸ்ட் தொடரில் இணைந்துள்ளார்.

ஒருநாள் தொடரில் சிறப்பு

ஒருநாள் தொடரில் சிறப்பு

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான கடந்த சர்வதேச ஒருநாள் தொடரில் முதல்முறையாக சேர்க்கப்பட்டு, தன்னுடைய திறமையான ஆட்டத்தின் மூலம் கவனம் பெற்றுள்ள கைல் ஜாமீசன் தற்போது மீண்டும் இந்த டெஸ்ட் தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் தனது சர்வதேச டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தை ஆடவுள்ளார்.

பயிற்சியாளர் பெருமிதம்

பயிற்சியாளர் பெருமிதம்

இந்நிலையில் சிறப்பான மற்றும் அனுபவம்மிக்க பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் காயத்திலிருந்து விடுபட்டு மீண்டும் இணைவது அணிக்கு மிகுந்த பலத்தை அளிக்கும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் ஜான் ஸ்டெட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதேபோல ஜாமீசனும் டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டுள்ளதற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் மகிழ்ச்சி

பயிற்சியாளர் மகிழ்ச்சி

இதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாடிய டோட் ஆஸ்லேவிற்கு பதிலாக ஸ்பின்னர் அஜாஸ் படேல் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பயிற்சியாளர், உள்ளூர் போட்டிகளிலும் வெளிநாடுகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் அஜாஸ் படேல் என்று கூறியுள்ளார்.

துவக்க வீரராக டாம் பிளெண்டல்

துவக்க வீரராக டாம் பிளெண்டல்

இதேபோல அணியின் ஆல்-ரவுண்டராக டாரில் மிட்செல்லும் துவக்க ஆட்டக்காரராக டாம் பிளெண்டலும் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்த டெஸ்ட் போட்டியில் 121 ரன்களை குவித்த டாம் பிளெண்டல் தற்போது இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாம் லாதமுடன் துவக்க வீரராக களமிறங்கி ஆடவுள்ளார்.

நாளை நியூசிலாந்து அணி பயணம்

நாளை நியூசிலாந்து அணி பயணம்

வெல்லிங்டனின் பேசின் ரிசர்வில் வரும் 21ம் தேதி துவங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இந்தியா, நியூசிலாந்து பங்கேற்ற பயிற்சி ஆட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணி நாளை வெல்லிங்டனுக்கு செல்லவுள்ளது. அங்கு சில தினங்கள் பயிற்சி மேற்கொள்ளும் அந்த அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ள இந்திய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

Story first published: Monday, February 17, 2020, 13:22 [IST]
Other articles published on Feb 17, 2020
English summary
New Zealand announced their 13-member squad for Test series vs India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X