For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது டெஸ்ட் நடைபெறுவதில் சிக்கல்.. வான்கடேவில் இருந்து வந்த புது அப்டேட்.. குழப்பத்தில் இந்திய அணி!

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறவுள்ளது.

Recommended Video

IND vs NZ 2வது Test நடைபெறுமா? Mumbai weather forecast | Oneindia Tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை ( டிசம்பர் 3) முதல் தொடங்கவுள்ளது.

2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி தான் வெற்றியாளரை நிர்ணயிக்கவுள்ளது.

இது மட்டும் நடந்தால் நியூசிலாந்து காலி.. ஆனால் நடத்தி காட்டுமா இந்தியா?இது மட்டும் நடந்தால் நியூசிலாந்து காலி.. ஆனால் நடத்தி காட்டுமா இந்தியா?

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டிக்காக இரு அணிகளும் தற்போது வீரர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் ஓய்வில் இருந்த விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார். இதனால் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர். இந்நிலையில் போட்டி நடைபெறுவதில் தான் பெரும் பிரச்னை உள்ளது.

வானிலை சூழல்

வானிலை சூழல்

2வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மும்பை மைதானத்தில் மழைக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், மும்பை நகரத்தில் இன்றைய தினம் 80% அளவிற்கு மழையின் வாய்ப்புகள் உள்ளன. இதற்கேற்றார் போல ஏற்கனவே மழை பொழிந்து பயிற்சி ஆட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளைய தினமும் மழைக்கு 50% சதவீதம் அளவிற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி

நற்செய்தி

ஆட்டத்தின் 2வது மற்றும் 3வது நாட்களில் ஓரளவிற்கு மழைப் பொழிவு இருந்தாலும், அட்டத்தை நிறுத்தும் அளவிற்கு பாதிப்புகள் இருக்காது எனத்தெரிகிறது. திங்கட்கிழமை மற்றும் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அன்று சூரியனை தெளிவாக காணலாம். இதனால் இந்த டெஸ்ட் போட்டி நிச்சயம் முழுவதுமாக 5 நாட்களும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எனினும் திடீரென மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

வான்கடே மைதானத்தில் ஏற்கனவே புற்கள் நிறைந்துள்ளன. தற்போது மழைப்பொழிவு வேறு இருப்பதால் இங்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால் 2வது டெஸ்டில் இந்திய அணி 1 சுழற்பந்துவீச்சாளர் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Thursday, December 2, 2021, 16:23 [IST]
Other articles published on Dec 2, 2021
English summary
Rain threats looms in Mumbai wankade ahead of 2nd Test between India vs New Zealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X