For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final: ஆன்லனில் லைவ் மேட்ச் பார்ப்பது எப்படி? டாஸ் எத்தனை மணிக்கு?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இன்று (ஜூன் 18) தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

எனினும், இன்று சவுத்தாம்ப்டனில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆட்டம் திட்டமிட்டப்படி நடக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக, போட்டி தொடங்கும் நேரத்தில் 80 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்று 7 வருடம் ஆனது.. இன்றும் சச்சினுக்கு உலகளவில் பெரும் சொத்துமதிப்பு..கோலியே பின்னாடி தான் ஓய்வு பெற்று 7 வருடம் ஆனது.. இன்றும் சச்சினுக்கு உலகளவில் பெரும் சொத்துமதிப்பு..கோலியே பின்னாடி தான்

வீரர்கள், ரசிகர்கள் என்று போட்டியை மிக ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், மழையின் இந்த அச்சுறுத்தல் போட்டி நடப்பதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைத்திருக்கிறது.

 ரிசர்வ் நாள்

ரிசர்வ் நாள்

எனினும், இறுதிப் போட்டி குறித்த முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள 'The Ageas Bowl' ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இன்று ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை இப்போட்டி நடைபெறுகிறது. ரிசர்வ் நாள் - ஜூன் 23.

 இரவு 10 மணியளவில்

இரவு 10 மணியளவில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அதுவே, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ளது. 3 மணிக்கு டாஸ் போடப்படும். ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் போட்டி நடைபெறும் என்பதால், இரவு 10 மணியளவில் ஆட்டம் முடிவடைய வாய்ப்புள்ளது.

 ஹாட்ஸ்டார்

ஹாட்ஸ்டார்

இப்போட்டியை எந்தெந்த நாடுகளில் எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம் என்ற லிஸ்ட் இங்கே,

இந்தியா - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்

நியூசிலாந்து - ஸ்கை ஸ்போர்ட்ஸ்

இங்கிலாந்து - ஸ்கை ஸ்போர்ட்ஸ்

தென்னாப்பிரிக்கா - சூப்பர்ஸ்போர்ட் மற்றும் எஸ்ஏபிசி

அதுமட்டுமின்றி, தமிழ் மைக்கேல் தமிழ் தளத்தில் லைவ் கமெண்ட்ரியை நேயர்கள் காணலாம். ஆன்லைனில், ஹாட்ஸ்டாரில் போட்டியை ரசிக்கலாம்.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம் இங்கே. ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜின்க்ய ரஹானே(துணைக் கேப்டன்), ரிஷப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

 கடைசி ஒரு மணி நேரத்தில்

கடைசி ஒரு மணி நேரத்தில்

இந்த இறுதிப் போட்டிக்கான விதிகளையும் ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஒரு நாள் ஆட்டம் பாதித்தால், அடுத்த நாள் விரைவாக தொடங்க அனுமதிக்கப்படும். அதேசமயம், மாலையில் ஒரு மணி நேரம் வரை கூடுதலாக விளையாடுவது அனுமதிக்கப்படும். மாற்று ஆப்ஷனாக ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரிசர்வ் நாள் பயன்படுத்துவது தொடர்பாக ஐந்தாவது நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இதை மேட்ச் ரெஃபரி இரு நடுவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் 5 நாட்களில் முடிவு எட்டப்படவில்லை என்றால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஐசிசி தெளிவுப்படுத்தியுள்ளது.

Story first published: Friday, June 18, 2021, 13:46 [IST]
Other articles published on Jun 18, 2021
English summary
WTC Final Live When and where to watch - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X