For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final :சூடு பிடிக்கும் ஃபைனல்.. அடுத்தடுத்து 2 விக்கெட்ஸ்.. நம்பிக்'கை' கொடுத்த அஷ்வின்

சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்து வருவதால், ஆட்டம் ஒத்திவைக்க வாய்ப்பு

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூன்.21) சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்வதால், ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூன்.21) சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்வதால், ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Jun 23, 2021, 11:09 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது நியூசிலாந்து இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசி., வெற்றி வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்று நியூசி., சாதனை

Jun 23, 2021, 10:20 pm IST

35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், டெய்லர் களத்தில் உள்ளனர் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்

Jun 23, 2021, 9:15 pm IST

நியூசிலாந்தின் டெவோன் கான்வே 19 ரன்களில் அஷ்வின் ஓவரில் அவுட் 47 பந்துகளை சந்தித்த கான்வே, அஷ்வின் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார் நியூசிலாந்து தனது இரண்டாவது விக்கெட்டை இழக்க ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

Jun 23, 2021, 8:48 pm IST

நியூசிலாந்தின் முதல் விக்கெட்டாக டாம் லாதம் 9 ரன்களில் அவுட் அஷ்வின் ஓவரில் இறங்கி அடிக்க ஆசைப்பட்டு, ஸ்டெம்பிங் ஆனார்

Jun 23, 2021, 8:20 pm IST

தேநீர் இடைவேளை முடிந்து மீண்டும் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து வெல்ல இன்னும் 120 ரன்கள் தேவை நியூசிலாந்து கைவசம் இன்னும் 10 விக்கெட்டுகள் மீதமுள்ளன WTC ஃபைனலில் இன்னும் 38 ஓவர்கள் மீதமுள்ளன

Jun 23, 2021, 7:13 pm IST

WTC ஃபைனலின் 2வது இன்னிங்ஸில், இந்தியா 170 ரன்களுக்கு ஆல் அவுட் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 41 ரன்களும், ரோஹித் 30 ரன்களும் எடுத்தனர் நியூசி., தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளை, போல்ட் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இறுதிப் போட்டியை வெல்ல நியூசி., அணிக்கு தேவை 139 ரன்கள்

Jun 23, 2021, 7:11 pm IST

ரிஷப் பண்ட் 41 ரன்களில் போல்ட் ஓவரில் அவுட் அஷ்வினும் 7 ரன்களில் போல்ட் ஓவரில் கேட்ச் ஆனார் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்துள்ளதால் நியூசி ஆதிக்கம்

Jun 23, 2021, 6:12 pm IST

60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் ரவீந்திர ஜடேஜா ஜோடி அதிரடி ஆட்டம்.

Jun 23, 2021, 5:05 pm IST

முதல் செஷன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது.

Jun 23, 2021, 5:05 pm IST

ரிஷப் பண்ட்- ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடி காட்டி வருகின்றனர்.

Jun 23, 2021, 4:46 pm IST

இந்திய அணியில் 5வது விக்கெட் சரிந்தது. நிதானமாக விளையாடி வந்த அஜிங்கிய ரஹானேவை 15 ரன்களுக்கு வெளியேற்றினார் ட்ரெண்ட் போல்ட்

Jun 23, 2021, 4:34 pm IST

2வது இன்னிங்ஸில் 100 ரன்களை கடந்தது இந்திய அணி. இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடி காட்ட முயற்சி.

Jun 23, 2021, 4:34 pm IST

49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்துள்ளது.

Jun 23, 2021, 3:49 pm IST

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கோலி, புஜாரா அவுட் கோலியை 13 ரன்னிலும், புஜாராவை 15 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேமிசன் 2வது இன்னிங்ஸில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது

Jun 23, 2021, 3:17 pm IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 6வது நாள் ஆட்டம் தொடங்கியது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 68 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலி 11 ரன்களுடனும், சட்டீஸ்வர் புஜாரா 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Jun 22, 2021, 11:45 pm IST

இந்திய அணி 5வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் நியூசிலாந்தை விட இந்திய அணி 32 ரன்கள் முன்னிலையில் உள்ளது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ஜூன்.23) ரிசர்வ் டே ஆட்டம் நடைபெற உள்ளது

Jun 22, 2021, 11:21 pm IST

ரோஹித் ஷர்மா 81 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார் சவுதி ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, இந்திய அணி 2வது விக்கெட்டை இழந்தது இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது களமிறங்கியுள்ளார்

Jun 22, 2021, 11:07 pm IST

2வது இன்னிங்ஸில் 24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 28 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் இந்திய அணி 13 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

Jun 22, 2021, 10:09 pm IST

2வது இன்னிங்ஸில் சுப்மன் கில் 8 ரன்களில் வெளியேறினார் 33 பந்துகளை சந்தித்த கில், சவுதி ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார் 11 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது

Jun 22, 2021, 9:01 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் முதல் இன்னிங்ஸில் நியூசி 249 ரன்களுக்கு ஆல் அவுட் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 32 ரன்கள் முன்னிலை கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர் இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்

Jun 22, 2021, 8:43 pm IST

96 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 17 ரன்கள் முன்னிலை

Jun 22, 2021, 8:43 pm IST

நியூசி., கேப்டன் வில்லியம்சன் 177 பந்துகளை சந்தித்து 49 ரன்களில் அவுட் இஷாந்த் ஷர்மா ஓவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் நீல் வேக்னர் 0 ரன்களில் அஷ்வின் ஓவரில் அவுட்

Jun 22, 2021, 7:59 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 7வது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து கைல் ஜேமிசன் 21 ரன்களில் அவுட் 16 பந்துகளை சந்தித்த ஜேமிசன் ஷமி ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்

Jun 22, 2021, 7:30 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 6வது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து காலின் டி கிராண்ட்ஹோம் 13 ரன்களில் அவுட் 30 பந்துகளை சந்தித்த கிராண்ட்ஹோம் ஷமி ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்

Jun 22, 2021, 6:12 pm IST

முதல் செஷனின் முடிவில் இந்திய அணி வலுவான நிலைமைக்கு திரும்பியுள்ளது. 72 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்.

Jun 22, 2021, 6:05 pm IST

நியூசிலாந்து அணியின் 5வது விக்கெட்டை சரிந்தது. முகமது ஷமி வீசிய பந்தில் வாட்ளிங் க்ளீன் பௌல்ட்.

Jun 22, 2021, 5:26 pm IST

ராஸ் டெய்லர் அடித்த ட்ரைவ் ஷாட்டை அட்டாகசமான டைவால் கேட்ச் பிடித்து சுப்மன் கில் அசத்தல்!

Jun 22, 2021, 5:17 pm IST

நியூசிலாந்து அணியின் 3வது விக்கெட்டை சாய்த்தார் முகமது ஷமி. நிதானமாக விளையாடி வந்த ராஸ் டெய்லர் 11 ரன்களுக்கு கேட்ச் ஆனார்.

Jun 22, 2021, 5:00 pm IST

60 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களை எடுத்துள்ளது. வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடியை பிரிக்க இந்திய அணி கடும் போராட்டம்.

Jun 22, 2021, 4:35 pm IST

55 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

Jun 22, 2021, 4:08 pm IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது.

Jun 21, 2021, 7:42 pm IST

இந்தியா vs நியூசி., இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 4ம் நாள் ஆட்டம் ரத்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Jun 21, 2021, 7:11 pm IST

WTC Final - உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வரை சவுத்தாம்ப்டனில் மழை பெய்துள்ளது தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்திருப்பதால் 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் நீடிக்கும் தாமதம்

Jun 21, 2021, 5:02 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 4ம் நாள் ஆட்டம் இன்னும் தொடங்கவில்லை இரண்டும் மணி நேரம் ஆகியும் நான்காம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் மழை தற்போது நின்றிருப்பதால், மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

Jun 21, 2021, 3:26 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 4வது நாள் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல்

Jun 21, 2021, 3:26 pm IST

சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்து வருவதால், ஆட்டம் ஒத்திவைக்க வாய்ப்பு

Jun 20, 2021, 10:43 pm IST

45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது.

Jun 20, 2021, 10:21 pm IST

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.

Jun 20, 2021, 9:54 pm IST

35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.

Jun 20, 2021, 8:31 pm IST

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.

Jun 20, 2021, 8:24 pm IST

இந்திய அணிக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பு தவறியது. முகமது ஷமி வீசிய பவுன்சர் பந்து, டாம் லாந்தம் பேட்டில் எட்ஜானது. ஆனால் ரஹானேவால் அந்த கேட்ச்-ஐ பிடிக்க முடியவில்லை.

Jun 20, 2021, 7:37 pm IST

10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்துள்ளது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க கடும் முயற்சி.

Jun 20, 2021, 6:38 pm IST

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து பவுலர் கெயில் ஜேமிசன் அசத்தல் பந்துவீச்சு

Jun 20, 2021, 5:36 pm IST

3ம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

Jun 20, 2021, 5:21 pm IST

இந்திய அணியில் 7வது விக்கெட் வீழ்ந்தது. சிறப்பாக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 22 ரன்களுக்கு அவுட்டானார்.

Jun 20, 2021, 5:21 pm IST

200 ரன்களை கடந்தது இந்திய அணி. அஸ்வின் - ஜடேஜா ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி வருகின்றனர்.

Jun 20, 2021, 4:55 pm IST

80 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்துள்ளது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.

Jun 20, 2021, 4:43 pm IST

இந்திய அணியின் 6வது விக்கெட்டை சாய்த்தார் நியூசிலாந்து பவுலர் வாக்னர். சிறப்பாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே 49 ரன்களுக்கு அவுட்.

Jun 20, 2021, 4:21 pm IST

இந்திய அணியில் 5வது விக்கெட் சரிந்தது. இளம் வீரர் ரிஷப் பண்ட் 4 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம்!

Jun 20, 2021, 4:20 pm IST

இந்திய அணியில் 5வது விக்கெட் சரிந்தது. இளம் வீரர் ரிஷப் பண்ட் 4 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம்!

Jun 20, 2021, 4:09 pm IST

150 ரன்களை எட்டியது இந்திய அணி. ரிஷப் பண்ட் - அஜிங்கியா ரஹானே ஸ்கோரை அதிகரிக்க முயற்சித்து வருகின்றனர்.

Jun 20, 2021, 3:39 pm IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது.
இந்திய அணி தற்போது வரை 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Jun 19, 2021, 10:58 pm IST

வெளிச்சமின்மை காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 2ம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.

Jun 19, 2021, 9:29 pm IST

வெளிச்சமின்மை காரணமாக இந்தியா - நியூசிலாந்து போட்டி 3வது முறையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Jun 19, 2021, 9:10 pm IST

60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் எடுக்க முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் சிரமம்.

Jun 19, 2021, 8:43 pm IST

வெளிச்சமின்மை காரணமாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Jun 19, 2021, 7:58 pm IST

55 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. கோலி - ரஹானே பார்ட்னஷிப்பை பிரிக்க நியூசிலாந்து பவுலர்கள் கடும் முயற்சி.

Jun 19, 2021, 7:28 pm IST

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்துள்ளது.

Jun 19, 2021, 7:11 pm IST

100 ரன்களை கடந்தது இந்திய அணி. கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரஹானே நிதானமாக ரன்களை உயர்த்தி வருகின்றனர்.

Jun 19, 2021, 7:06 pm IST

45 ஓவர்களுக்கு இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி - அஜிங்கியா ரஹானே அணியை மீட்க முயற்சித்து வருகின்றனர்.

Jun 19, 2021, 5:53 pm IST

30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி - புஜாரா ஜோடி நிதான ஆட்டம்.

Jun 19, 2021, 5:06 pm IST

2ம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவடைந்தது. உணவு இடைவெளி வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எடுத்துள்ளது.

Jun 19, 2021, 4:52 pm IST

இந்திய அணியின் 2வது விக்கெட் சாய்த்தார் வாக்னர். நிதானமாக ஆடி வந்த தொடக்க வீரர் சுப்மன் கில் 28 ரன்களுக்கு அவுட்டானார்.

Jun 19, 2021, 4:39 pm IST

21 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களை எடுத்துள்ளது. சுப்மன் கில் - புஜாரா ஜோடி நிதான ஆட்டம்.

Jun 19, 2021, 4:38 pm IST

இந்திய அணியில் முதல் விக்கெட் சரிந்தது. சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 34 ரன்களுக்கு ஜேமிசன் பந்துவீச்சில் அவுட்

Jun 19, 2021, 4:23 pm IST

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்தது.

Jun 19, 2021, 4:23 pm IST

ரோஹித் ஷர்மா 29 ரன்களுடனும், ஷுப்மன் கில் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Jun 19, 2021, 3:57 pm IST

இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 41-0

Jun 19, 2021, 3:57 pm IST

ரோஹித் ஷர்மா 44 பந்துகளில் 21 ரன்கள்

Jun 19, 2021, 3:57 pm IST

ஷுப்மன் கில் 28 பந்துகளில் 19 ரன்கள்

Jun 19, 2021, 3:57 pm IST

இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என நியூசிலாந்து பவுலர்கள் சவுதி, போல்ட் புகுந்து விளையாடுகின்றனர். 'என்ன காலி பண்ணிடாதீங்கடா' என்ற ரோஹித்தின் கலக்கம் அவர் கண்கள் மூலம் நமக்கு கண்ணாடி மாதிரி தெரிகிறது.

Jun 19, 2021, 2:51 pm IST

WTC FINAL: ஒருவழியாக போட்டி தொடங்கியது.. டாஸ் வென்ற நியூஸி, பவுலிங் தேர்வு!

Jun 19, 2021, 2:51 pm IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கியது.

Jun 19, 2021, 2:51 pm IST

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

Jun 18, 2021, 11:47 am IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30.மணிக்கு தொடங்குகிறது.

Jun 18, 2021, 11:47 am IST

போட்டி நடைபெறும் மைதானமான சவுத்தாம்ப்டனில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆட்டம் திட்டமிட்டப்படி தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது

Jun 18, 2021, 11:47 am IST

மழை முற்றிலும் நின்றுவிட்டால், இந்திய நேரப்படி, மதியம் 2.30 மணிக்கு டாஸ் போடப்படும்.

Story first published: Wednesday, June 23, 2021, 21:15 [IST]
Other articles published on Jun 23, 2021
English summary
WTC Final 2021, India vs New Zealand, World Test Championship, southampton, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட், சவுத்தாம்டன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X