For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“14 - 0” டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அசுரத்தனமான சாதனை.. விராட் கோலியின் சிறந்த பதிலடி..முழு விவரம்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த நவம்பர் 27ம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

அஸ்வினின் சுழலில் சிக்கி தவித்த நியூஸி,.. 2வது டெஸ்டில் இந்தியா அசத்தல்.. வெற்றி பெற்றது எப்படி? அஸ்வினின் சுழலில் சிக்கி தவித்த நியூஸி,.. 2வது டெஸ்டில் இந்தியா அசத்தல்.. வெற்றி பெற்றது எப்படி?

நியூசி, டெஸ்ட் தொடர்

நியூசி, டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கியது. இதில் விராட் கோலி மீண்டும் அணிக்குள் வந்தார். இதில் இந்திய அணி இரண்டு இன்னிங்ஸிலும் , 325, 276 எனக் குவித்தது. நியூசிலாந்து அணி 62 மற்றும் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரையும் 1 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

புதிய சிறப்பு

புதிய சிறப்பு

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பல்வேறு சிறப்புகள் கிடைத்துள்ளன. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவின் வெற்றி பாதை தொடர்ந்துக் கொண்டே வருகிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய அணிகளின் பட்டியலில் 14 வெற்றிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 10 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

கடைசி தோல்வி எப்போது

கடைசி தோல்வி எப்போது

சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக கடந்த 2012 - 2013ம் ஆண்டு காலத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை இழந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதன்பிறகு விளையாடிய 14 டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி வெற்றியை மட்டுமே கண்டுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த 14 டெஸ்ட் தொடர்களில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

Recommended Video

ICC Test Rankings: India dethrone New Zealand to reclaim top spot | Oneindia Tamil
புகழாரம்

புகழாரம்

இந்த சாதனையுடன் சேர்ந்து இந்திய அணி மற்றொரு புதிய ரெக்கார்டை செய்துள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெறும் வெற்றி இதுவே ஆகும். நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இதனால் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Story first published: Monday, December 6, 2021, 17:19 [IST]
Other articles published on Dec 6, 2021
English summary
14-0 Record! India's home series record-extending win over New Zealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X