இளம் சிங்கம் அதிரடி.. இமாலய இலக்கை எட்ட இந்திய அணி தீவிரம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.

விராட் கோலி, ரோஹித் சர்மா,கே.எல்.ராகுல், பும்ரா, ஷமி ஆகியோர் இல்லாததால் இளம் வீரர்கள் எப்படி செயல்படுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது.

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள், 2 வேகப்பந்துவீச்சாளர்கள் , 5 பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர் என்ற கணக்கில் அணியை தேர்வு செய்து இருந்தனர்.

சுப்மான் கில்

சுப்மான் கில்

ஆட்டத்தின் தொடக்கம் முதலே சுப்மான் கில், மாயங் அகர்வால் ஜோடி நினமாக விளையாடியது. ஆட்டத்தின் 2.3வது ஒவரில் சுப்மான் கில்லுக்கு நடுவர் தவறாக அவுட் தர, பின்னர் மறு ஆய்வில் அது அவுட் இல்லை என முடிவு வந்தது. மாயங்க அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இதன் பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா, சுப்மான் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. மதிய நேர உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய முதல் ஓவரிலேயே சுப்மான் கில் 52 ரன்களில் ஜேமிசன் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதன் பின் ஜோடி சேர்ந்த இந்தியாவின் அனுபவ வீரர்களான புஜாரா, ரஹானே நியூசிலாந்த பந்துவீச்சாளர்களை மட்டை போட்டு வெறுப்பேற்றினர். வழக்கம் போல் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய புஜாரா 88 பந்தில் 26 ரன்கள் எடுத்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். சற்று அதிரடியாக விளையாடிய ரஹானே 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் ஸ்டம்புகள் சிதற, பெவிலியன் திரும்பினார்

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணி 145 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, இந்திய அணியை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அறிமுக வீரராக இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய ஷாட்களை ஆடி தண்டனை கொடுத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே அரைசதம் சதம் விளாசினார்.

ஜடேஜா

ஜடேஜா

இது போன்று, ஜடேஜாவும் நானும் டெஸ்ட் பிளேயர் தான் என்ற வேகத்தில் விளையாடி வந்தார். குறிப்பாக ஓயிடாக ஆப் சைடில் வீசப்பட்ட பந்தை ஜடேஜா தொடவே இல்லை. வாய்ப்பு இருக்கும் பந்தை மட்டும் அடித்து ஆடிய ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 258 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களுடனும் ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் இமாலய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Newzealand 1st test Day 1 in Kanpur. A Half century From Shubaman Gill. Shreyas Iyer and Jadeja Puts India in Driving Position
Story first published: Thursday, November 25, 2021, 17:59 [IST]
Other articles published on Nov 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X