அப்பாடா.. ஒரு வழியா டாஸ் போட்டாச்சு.. கோலிக்கு அடிச்ச லக்..

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது.

கடந்த 2 நாட்களாக மும்பையில் மழை பெய்தது. தற்போது மழை நின்றாலும், மைதானத்தில் ஈரம் அதிகமாக இருந்தது.

இதனால் வீரர்களின் பாதுகாப்பை காரணம் காட்டி ஆட்டம் தொடங்குவதில் தாமதமானது.

இந்த நிலையில், காலை 9 மணிக்கு போட வேண்டிய டாஸ், 11.30 மணிக்கு போடப் பட்டது. இதில் டாஸ் வென்ற விராட் கோலி, பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக டாம் லாத்தம் நியூசிலாந்து அணியை வழி நடத்துகிறார்.

இந்திய அணியில் ரஹானே, ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு ஒரே நேரத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி, அணியிலிருந்து கோலி நீக்கிவிட்டார். இதனால் ஜடேஜாவுக்கு பதில் ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மாவுக்கு பதில் முகமது சிராஜ் மற்றும் ரஹானேவிற்கு பதில் கோலி இடம்பெற்றுள்ளார். இதே போன்று நியூசிலாந்து அணியில் வில்லியம்சனுக்கு பதில் டேரல் மிட்செல் இடம்பெற்றுள்ளார்.

Virat Kohli Wicket-ல் எழுந்த சர்ச்சை.. கடுப்பான ரசிகர்கள்

மும்பை ஆடுகளம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்தது சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே வேலை, வானம் மேகமுட்டத்துடன் இருப்பதால், முதல் 10 ஓவர் பந்து ஸ்விங் ஆகும். இதனை இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சமாளிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Newzealand 2nd test Match toss happened. Kohli Won the toss and choose to bat. 3 Changes in the Team.
Story first published: Friday, December 3, 2021, 12:04 [IST]
Other articles published on Dec 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X