For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய முறையில் பந்துவீச்சு.. அஸ்வின் - அம்பயர் இடையே திடீர் வாக்குவாதம்.. பதறிப்போன கேப்டன் - வீடியோ

சென்னை: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது அஸ்வின் மற்றும் நடுவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

புதிய முறையில் பந்துவீச்சு.. அஸ்வின் - அம்பயர் இடையே திடீர் வாக்குவாதம்.. பதறிப்போன கேப்டன் - வீடியோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 3வது நாளில் பல திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங்கை செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை குவித்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி சீரான வேகத்தில் ரன்களை குவித்தது.

“3 முறை அவுட்டாகியும் விக்கெட் இல்லை” தூண் போன்று நின்று ஆடும் நியூஸி, ஓப்பனர்கள்.. திணறும் இந்தியா “3 முறை அவுட்டாகியும் விக்கெட் இல்லை” தூண் போன்று நின்று ஆடும் நியூஸி, ஓப்பனர்கள்.. திணறும் இந்தியா

 முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் விளையாடி வந்த நியூஸிலாந்து அணி இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் லாதம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் சேர்க்க 250 ரன்களை கடந்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

அஸ்வினின் செயல்பாடு

அஸ்வினின் செயல்பாடு

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது மைதானத்தில் பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் கள நடுவர் நிதின் மேனன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய போட்டியில் விக்கெட் எடுக்க தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வந்தார். அதில் அவர் பிட்ச்-க்கு நடுவே சென்று பந்துவீசியது தான் சர்ச்சையாகியுள்ளது.

நடுவர் குற்றச்சாட்டு

நடுவர் குற்றச்சாட்டு

அதாவது நான்ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் உள்ள ஸ்டம்பிற்கு முன்னர் வந்து பவுலிங் செய்கிறார். இதனால் களத்தில் இருக்கும் நடுவருக்கு பார்வை மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதே போல பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை தடுப்பதற்காக நான்ஸ்ட்ரைக்கர் நிற்கும் திசை நோக்கி ஓடினார். அவ்வாறு ஓடுவது நான்ஸ்ட்ரைக்கரை தொந்தரவு செய்யும் வகையில் இருந்துள்ளது.

திடீர் வாக்குவாதம்

திடீர் வாக்குவாதம்

எனவே அஸ்வினிடம், இனி இப்படி செய்யாதீர்கள் என நடுவர் நிதின் மேனன் கூற, அதிருப்தி அடைந்த அஷ்வின் வாக்குவாதம் செய்துள்ளார். அதாவது, நான் ஏற்கனவே இதே போன்ற முறையில் பந்துவீசி பயிற்சி எடுத்துள்ளேன். அதுமட்டுமின்றி போட்டியின் நடுவர் இடமும் இதுகுறித்து எனது சந்தேகங்களை கேட்டேன். இதில் எந்தவித தவறும் இல்லை என்று போட்டியின் நடுவர் கூறிவிட்டதாகவும், கிரிக்கெட் விதிகளின்படியே தான் பந்து வீசுவதாக அம்பயர் நிதின் மேனன் உடன் அஷ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 வீடியோ

வீடியோ

இந்த வாக்குவாதம் முற்றும் அளவிற்கு சென்றதால், அங்கு வந்த கேப்டன் ரஹானே, விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் பந்துவீசுவதாகவும், டேஞ்சர் ஏரியாவில் அஸ்வின் செல்லவில்லை பந்து வீசி விட்டு சரியான அளவில்தான் ஓடுகிறார் என்றும் முறையிட்டார். இதனால் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Story first published: Saturday, November 27, 2021, 17:00 [IST]
Other articles published on Nov 27, 2021
English summary
Ahswin involved in heated argument with umpire after tha new bowling method in 1st test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X