அஸ்வின் படைக்கப்போகும் உலக சாதனை.. ஹர்பஜன் ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு..முதல் டெஸ்டில் நிறைவேறுமா

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் புதிய உலக சாதனை படைக்க காத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம். இளம் வீரருக்கு அடிச்சது லக்..!!இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம். இளம் வீரருக்கு அடிச்சது லக்..!!

 முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்த போட்டியில் பந்துவீச்சு மிகமுக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இதில் குறிப்பாக மீண்டும் அஸ்வின் முழு வீச்சில் டெஸ்டில் களமிறங்குகிறார். கடந்த 4 ஆண்டுகளாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அஸ்வின், கடந்த சில போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் தான் ஒரு ஜாம்பவான் தான் என்பதை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 காத்திருக்கும் அஸ்வின்

காத்திருக்கும் அஸ்வின்

சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 413 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இன்று தொடங்கியுள்ள முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை (417) முந்தி 3வது இடத்தை பிடிப்பார். இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

ஸ்பின்னர்களின் வாய்ப்பு

ஸ்பின்னர்களின் வாய்ப்பு

இதே போல சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கவும் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது வரை கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் முதல் 2 இடங்களில் உள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் கலக்கிய நிலையில் இந்த போட்டியில் புதிய மைல்கல்லை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 உமேஷ் யாதவ் மைல்கல்

உமேஷ் யாதவ் மைல்கல்

இதே போல இன்றைய போட்டியில் உமேஷ் யாதவும் புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது. அவர் இந்த போட்டியில் இன்னும் 4 விக்கெட்டுகளை எடுத்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை தாண்டுவார். இந்திய கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்த 4வது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன்னர் கபில் தேவ் (219), ஜவகல் ஸ்ரீநாத் (108), ஜாகீர் கான் (104) ஆகியோர் உள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ashwin is waiting to beat harbajan singh's world record in 1st test against Newzealand
Story first published: Thursday, November 25, 2021, 13:26 [IST]
Other articles published on Nov 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X