For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், சேவாக் ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு.. நியூசிலாந்து தொடரில் கெத்து காட்டுவாரா தோனி?

Recommended Video

நியூசிலாந்து தொடரில் புதிய சாதனைக்காக காத்திருக்கும் தோனி- வீடியோ

ஆக்லாந்து : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஒருநாள் போட்டித் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் தோனி புதிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது.

நியூசிலாந்து தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், சச்சின், சேவாக்கை முந்த வாய்ப்புள்ளது. அது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் கலக்கல்

ஆஸ்திரேலியாவில் கலக்கல்

தோனி ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார். தான் இன்னும் பார்மில் இருப்பதை உலகுக்கு உணர்த்தினார். ஆஸ்திரேலியாவை போல தோனி நியூசிலாந்து தொடரிலும் கலக்குவாரா என்ற கேள்வி எல்லோருக்கும் உள்ளது.

சாதனை வாய்ப்பு

சாதனை வாய்ப்பு

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் போல, நியூசிலாந்து தொடரில் தோனி ரன் குவிக்கும் பட்சத்தில், நியூசிலாந்து மண்ணில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின், சேவாக்கை தோனி முறியடிக்க வாய்ப்புள்ளது.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

கடந்த காலங்களில் நியூசிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் பலர் ரன் குவிக்க தடுமாறியுள்ளனர். மேலும், இந்தியா, நியூசிலாந்தில் ஆடிய 34 ஒருநாள் போட்டிகளில் 21 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்

ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்

சில இந்திய வீரர்கள் மட்டுமே நியூசிலாந்தில் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அவர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் சச்சின் (18 போட்டிகளில் 652 ரன்கள்), சேவாக் (12 போட்டிகளில் 598 ரன்கள்), தோனி (12 போட்டிகள், 9 இன்னிங்க்ஸ்களில் 456 ரன்கள்).

196 ரன்கள் எடுத்தால்..

196 ரன்கள் எடுத்தால்..

தோனி 196 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சச்சினை முந்தி நியூசிலாந்து மண்ணில் அதிக ரன் அடித்த இந்தியர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து விடுவார். இந்த முறை ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகள் இருப்பதால் தோனி இந்த சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்புள்ளது.

தோனியின் பேட்டிங் சராசரி

தோனியின் பேட்டிங் சராசரி

தோனி இது வரை இரண்டு முறை நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரில் ஆடியுள்ளார். அந்த போட்டிகளில் தோனி எளிதாக ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து மண்ணில் தோனியின் பேட்டிங் சராசரி 90.16 ஆகும். தற்போது உள்ள இந்திய அணியில் தோனி மட்டுமே நியூசிலாந்தில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்.

தோனி சாதிப்பாரா?

தோனி சாதிப்பாரா?

மேலும், 2009இல் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்று, நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார். நியூசிலாந்து என்றாலே தோனி கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், இந்த தொடரிலும் தோனி மீது தான் பலரது கண்களும் உள்ளன.

Story first published: Monday, January 21, 2019, 11:27 [IST]
Other articles published on Jan 21, 2019
English summary
India vs Newzealand : Dhoni can beat Sachin’s record at NewZealand ODI series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X