For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஆப்பு ரகானேவுக்கு இல்ல”.. டிராவிட் கூறிய முக்கிய தகவல்.. 2வது டெஸ்டில் வெளியேற போகும் வீரர் யார்?

சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் ப்ளேயிங் 11 குறித்த முக்கிய அப்டேட்டை ராகுல் டிராவிட் கொடுத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்குகிறது.

முதல் போட்டி டிராவில் முடிவடைந்ததால், 2வது டெஸ்டில் வெற்றி பெறும் அணி தான் தொடரை கைப்பற்றியதாக அறிவிக்கப்படும். எனவே இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

6 ஆண்டு இருள் காலம்.. 10 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த பதவி.. பேட் கம்மின்ஸ் பின்னால் மறைந்துள்ள கதை 6 ஆண்டு இருள் காலம்.. 10 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த பதவி.. பேட் கம்மின்ஸ் பின்னால் மறைந்துள்ள கதை

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி, 2வது டெஸ்டிற்கு அணிக்குள் மீண்டும் வருகிறார். எனவே அவருக்கு இடமளித்து எந்த வீரரை ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அறிமுக போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசியதால் ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை உறுதி செய்துக்கொண்டார். எனவே ரகானே தான் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.

வெளியேறுகிறாரா ரகானே

வெளியேறுகிறாரா ரகானே

டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரகானே தொடர்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த டெஸ்ட் போட்டிக்கூட வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த போது கூட ரகானே முதல் இன்னிங்ஸில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

டிராவிட் சொன்ன தகவல்

டிராவிட் சொன்ன தகவல்

இந்நிலையில் அஜிங்கியா ரகானே, ப்ளேயிங் 11 இடம்பெறுவார் என்பதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எனக்கு ரஹானேவின் பார்ம் குறித்து எந்தவித கவலையும் இல்லை. நீங்களும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் ரகானே மிகவும் திறமையான வீரர். அவரை எப்போதும் ரன் அடிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அதற்கு எந்தவொரு வீரராலும் உறுதி தரமுடியாது.

Recommended Video

New Zealand-க்கு எதிரான போட்டியில் அதிகம் பேசப்பட்ட Pitch.. Dravid கொடுத்த பரிசு
ஒரே ஒரு இன்னிங்ஸ்

ஒரே ஒரு இன்னிங்ஸ்

ரகானே, இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரை போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வீரருக்கு ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் கிடைத்தால் போதும், அவரது ஆட்டம் முற்றிலுமாக மாறிவிடும். எனவே அவரைப் பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம் என டிராவிட் கூறியுள்ளார். இதன் மூலம் 2வது டெஸ்டில் ரகானே இருப்பது உறுதியாகியுள்ளது. புஜாரா வெளியேற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Tuesday, November 30, 2021, 17:12 [IST]
Other articles published on Nov 30, 2021
English summary
India vs Newzealand: Dravid Opens up on Rahane's batting form, and Playing 11 for 2nd test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X