For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 டெஸ்டிற்கு 4 கேப்டன்கள்.. நியூஸி, வீரரால் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.. இந்திய அணிக்கு அடித்த லக்!

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் சூப்பர் அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில் மழையின் குறுக்கீட்டால் தாமதமானது.

இந்திய ஹாக்கி அணிக்கு அரசு ஒரு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்யுது தெரியுமா??இந்திய ஹாக்கி அணிக்கு அரசு ஒரு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்யுது தெரியுமா??

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்த நிலையில் கடைசி நேரத்தில் 3 முக்கிய மாற்றங்களை இந்திய அணி மேற்கொண்டது. அதாவது துணைக்கேப்டன் ரகானே, ரவீந்திர ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படவுள்ளனர்.

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

இந்திய அணியின் சீனியர் வீரர்களான 3 பேர் வெளியேறியிருப்பதால் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் ஒன்றும் அடித்துள்ளது. அதாவது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு கை மூட்டு பகுதியில் காய பாதிப்பு ஏற்பட்டதால் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. வில்லியம்சனுக்கு பதிலாக டாம் லேதம் அணியை வழிநடத்தவிருக்கிறார்.

சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

இந்த மாற்றங்களால் சுவாரஸ்ய விஷயம் ஒன்று நடந்துள்ளது. 2 டெஸ்ட் போட்டிகளுக்கு ரகானே, கோலி, வில்லியம்சன், டாம் லாதம் என மொத்தம் 4 கேப்டன்கள் செயல்படவுள்ளனர். அதிலும் குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரகானே மற்றும் வில்லியம்சன் ஆகியோர் 2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.

Recommended Video

Virat Kohli Wicket-ல் எழுந்த சர்ச்சை.. கடுப்பான ரசிகர்கள்
போட்டி தாமதம்

போட்டி தாமதம்

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மும்பை நகரத்தில் நல்ல மழை பொழிந்துள்ளதால், பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் அதனை சுத்தப்படுத்தி, ஈரத்தை போக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Story first published: Friday, December 3, 2021, 13:57 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
Kane Williamson is missing the second Test against India , Four different captains in a two-test match series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X