For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'கடைசி நேர ட்விஸ்ட்' டெஸ்டில் அறிமுகமான ஸ்ரேயாஸ்.. நியூஸி, க்கு எதிராக பக்கா ப்ளேயிங் 11!

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் நோக்கத்தில் மிக பலமான ப்ளேயிங் 11-உடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

 பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இந்திய அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரோகித் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், முதல் டெஸ்ட் போட்டியை ரகானே வழிநடத்துகிறார். இதனால் இந்த போட்டியில் இளம் வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. கே.எல்.ராகுல் வெளியேறியதால், ஓப்பனிங்கில் சுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்குகின்றனர். முதல் விக்கெட்டிற்கு சட்டீஸ்வர் புஜாரா களமிறங்கவுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

விராட் கோலியின் இடத்திற்காக இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு அஜிங்கியா ரகானே, விரிதிமான் சாஹா ஆகிய மூத்த வீரர்கள் பேட்டிங் வரிசையில் களமிறங்கியுள்ளனர். ரகானேவுக்கு இந்த டெஸ்ட் போட்டி வாழ்வா? சாவா? ஆட்டம் என்பதால் நிச்சயம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

பந்துவீச்சை பொறுத்தவரை அனைவரும் எதிர்பார்த்தபடியே 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர். அவர்களுடன் டி20 போட்டிகளில் கலக்கிய அக்‌ஷர் பட்டேல் களமிறக்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சில் இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

 பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

கான்பூர் பிட்ச்சை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்குமே சாதகமாக இருக்கும். ஆனால் முதலில் பேட்டிங்கை செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது. நியூசிலாந்து அணியும் 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளது.

Story first published: Thursday, November 25, 2021, 18:50 [IST]
Other articles published on Nov 25, 2021
English summary
Shreyas Iyer makes a debut in test cricket, Team india's balanced playing 11 in 1st test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X