For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இன்னும் 6 விக்கெட்கள் தான்”.. அஸ்வினுக்கு காத்திருக்கும் பிரமாண்ட சாதனை.. முதல் இந்தியரே அவர்தானாம்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் மீண்டும் ஒரு அசத்தல் சாதனையை படைக்கவுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இது அதிக ஸ்கோர் ஆட்டமாக இருக்கும் எனத்தெரிகிறது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். அதற்கு காரணம் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். நியூசிலந்துக்கு எதிராக கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் மற்றொரு முக்கிய சாதனையை படைக்கவுள்ளார். சமீப காலங்களில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த அஸ்வின், தற்போது தனது இடத்தை தக்கவைத்துள்ளார். அவர் இந்தாண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் 6 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

 முதல் இந்தியர்

முதல் இந்தியர்

எனவே அதே போல நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்த ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை படைப்பார். இதுமட்டுமின்றி 4வது முறையாக முறையாக ஒரே ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைப்பார்.

Recommended Video

IND vs NZ இந்திய அணி செய்த தவறை சரியாக சொன்ன பாட்டி | Oneindia Tamil
அதிக வாய்ப்புகள்

அதிக வாய்ப்புகள்

இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் ஆகியோர் மூன்று முறை ஒரே ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இந்த முறை அஸ்வின் எடுத்துவிட்டால் முதல் பந்துவீச்சாளராக 4 ஆண்டுகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைப்பார். மும்பை களம் கொஞ்சம் கொஞ்சமாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி வருகிறது. எனவே நிச்சயம் அஸ்வின் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 3, 2021, 19:39 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
Spinner Ravichandran Ashwin Eyes 50-Wicket Mark In this year, looks for another record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X