For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வினின் சுழலில் சிக்கி தவித்த நியூஸி,.. 2வது டெஸ்டில் இந்தியா அசத்தல்.. வெற்றி பெற்றது எப்படி?

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Recommended Video

Ashwin அபார சாதனை! Kumble, Harbhajan Record முறியடிக்கப்பட்டது | OneIndia Tamil

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் சமனில் முடிவடைந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 345 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் பதவி ஏற்கும் சுரேஷ் ரெய்னா?.. முன்னணி அணியின் சூப்பர் திட்டம்.. இடையூறு கொடுக்கும் டெல்லி! கேப்டன் பதவி ஏற்கும் சுரேஷ் ரெய்னா?.. முன்னணி அணியின் சூப்பர் திட்டம்.. இடையூறு கொடுக்கும் டெல்லி!

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இந்திய அணியில் ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுணையில் தூண் போன்று நின்று விளையாடிய ஓபனர் மயங்க் அகர்வால் 150 (311) ரன்களும், அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 52 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இருந்தது. நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

பிட்ச்-ல் திடீர் மாற்றம்

பிட்ச்-ல் திடீர் மாற்றம்

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியில் ரன்கள் சேர்வதற்குள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. குறிப்பாக ஓபனர் டாம் லதாம் 10 (14) மற்றும் கெயில் ஜேமிசன் 17 (36) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 263 ரன்கள் பின்தங்கியது.

கோலி எடுத்த முடிவு

கோலி எடுத்த முடிவு

இதனால் இந்திய அணி பாலோ ஆன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் விராட் கோலி, நாங்கள் பேட்டிங் செய்யவுள்ளோம் என அறிவித்தார். 2வது இன்னிங்ஸிலும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் ஓப்பனர்களக மயங்க் அகர்வால் 62, சத்தீஸ்வர் புஜாரா 47 ஆகியோர் களமிறங்கி சிறப்பாக விளையாடினர். இதன்பிறகு வந்த சுப்மன் கில் 47, கோலி 36 ரன்கள் அடிக்க, 276 /7 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

வெற்றி

வெற்றி

540 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்த முறையும் சொதப்பல்களே மிஞ்சியது. இந்திய ஸ்பின்னர்களிடம் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க, டேர்லி மிட்செல் மட்டும் அதிகபட்சமாக 60 ரன்களை எடுத்தார். இறுதியில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Story first published: Monday, December 6, 2021, 12:19 [IST]
Other articles published on Dec 6, 2021
English summary
Team India beats newzealand by 372 runs, and won the series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X