For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரகானேவுடன் சேர்ந்து வெளியேறிய 2 முக்கிய வீரர்கள்.. டிராவிட் அதிரடி முடிவு..2வது டெஸ்டின் ப்ளேயிங் 11

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Recommended Video

India vs NZ 2nd Test: Rahane, Jadeja, Ishant, Williamson ruled out | OneIndia Tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.

2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. எனவே இன்று வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கிய போட்டி நடைபெறுகிறது.

இந்திய ஹாக்கி அணிக்கு அரசு ஒரு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்யுது தெரியுமா??இந்திய ஹாக்கி அணிக்கு அரசு ஒரு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்யுது தெரியுமா??

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஏனென்றால் விராட் கோலி மீண்டும் அணிக்குள் வந்துள்ளதால், அவருக்கு வழிவிடப்போகும் வீரர்கள் யார் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. குறிப்பாக அஜிங்கியா ரகானே அல்லது புஜாரா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படலாம் எனக்கூறப்பட்டது.

அதிரடி மாற்றங்கள்

அதிரடி மாற்றங்கள்

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத முக்கிய முடிவுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, அஜிங்கியா ரகானே ஆகிய வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு கைகளிலும், ரகானேவுக்கு காலிலும் காய பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இந்த மாற்றங்களை செய்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் இருந்து கூறியுள்ளது.

மாற்று வீரர்கள் யார்?

மாற்று வீரர்கள் யார்?

இதில் ரகானேவுக்கு மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் நீடிக்கலாம். முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இஷாந்த் சர்மாவுக்கு மாற்று வீரராக இளம் வீரர் முகமது சிராஜ் களமிறங்குவார் எனத்தெரிகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் என்பதால் சிராஜ் இதில் சோபிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளது. இதே போல ஜடேஜாவுக்கு மாற்றாக ஜெயந்த் யாதவ் களமிறங்கலாம் எனக்கூறப்படுகிறது. பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் ஜெயந்த் யாதவ் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவர் நிச்சயம் பேட்டிங் வரிசையில் உதவுவார் எனத்தெரிகிறது.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

மும்பையில் கடந்த 2 நாட்களாக நல்ல மழைப்பொழிவு இருந்துள்ளதால் பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. இதனால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் அங்கு உள்ளது. இதில் எப்படி இந்திய அணி எப்படி ஜெயந்த் யாதவ், அஸ்வின், அக்‌ஷர் படேல் என 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறது என்ற ஆச்சரியம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ப்ளேயிங் 11 எதிர்பார்ப்பு

ப்ளேயிங் 11 எதிர்பார்ப்பு

மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சாஹா, ஜெயந்த் யாதவ், அஸ்வின், அக்‌ஷர் படேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ்

Story first published: Friday, December 3, 2021, 13:56 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
Team India Made a 3 Important Changes in 2nd test against Newzealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X