For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“3 முறை அவுட்டாகியும் விக்கெட் இல்லை” தூண் போன்று நின்று ஆடும் நியூஸி, ஓப்பனர்கள்.. திணறும் இந்தியா

சென்னை: இந்திய அணியின் முன்னணி பவுலர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் நியூசிலாந்தின் ஓப்பனர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோரை நிர்ணயித்த போதும் திணறி வருகிறது.

அறிமுக போட்டியில் சதம்… இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.. அறிமுக போட்டியில் சதம்… இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..

 இந்திய அணியின் ஸ்கோர்

இந்திய அணியின் ஸ்கோர்

இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை குவித்திருந்தது. ஆனால் 2வது நாள் ஆட்டத்தில் விக்கெட்கள் சரிய தொடங்கியது. சிறப்பாக விளையாடிய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 105 (171 சதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து சுப்மன் கில் 52 (93) மற்றும் ரவீந்திர ஜடேஜா 50 (112) ஆகிய இருவரும் அரைசதம் விளாச இந்திய அணி 2வது நாளில் 345 ரன்களை குவித்துள்ளது.

சிறந்த தொடக்கம்

சிறந்த தொடக்கம்

இதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியை தொடக்க வீரர்கள் தூண் போன்று தாங்கி வருகின்றனர். அந்த அணியின் ஓப்பனிங் வீரர்கள் டாம் லாதம், வில் யங் ஆகியோர் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். இன்னிங்ஸின் தொடக்கத்தில் இஷாந்த் சர்மா வீசிய ஓவரில் லாதம் கீப்பர் கேட்ச் ஆனார். ஆனால் அதனை லாதம் ரிவ்யூ எடுத்து தப்பித்தார். இதனால் அவர்களின் பார்ட்னர்ஷிப் இன்னும் பலமானது.

2வது அதிர்ஷ்டம்

2வது அதிர்ஷ்டம்

இந்திய அணியின் பலமாக பார்க்கப்படும் அக்சர் படேல், ரவிச்சிந்திரன் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. மறுபக்கம் ரன்களும் வேகமாக உயர்ந்து வந்தது. இறுதியில் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் இடையே ஜடேஜா வீசிய ஒரு பந்திலும் லாதம் எல்.பி.டபள்யூ கொடுக்கப்பட்டார். ஆனால் அதற்கும் தளராத லாதம் ரிவ்யூ எடுத்து மீண்டும் தப்பித்தார்.

2ம் நாள் ஆட்ட முடிவு

2ம் நாள் ஆட்ட முடிவு

"எவ்வளவு பயமுறுத்தினாலும் தாங்குறாங்களே" என்பது போல லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். இதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் இறுதியில் கூட டாம் லாதம் அஸ்வினின் பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ கொடுக்கப்பட்டார். பின்னர் அதிலிருந்தும் அவர் தப்பித்து தொடர்ந்து பார்ட்னர்ஷிப்பை பலப்படுத்திவிட்டார். இதனால் இன்றைய நாளில் இந்தியாவுக்கு அதிர்ஷ்டமே இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, November 26, 2021, 17:30 [IST]
Other articles published on Nov 26, 2021
English summary
Tom Latham, Will Young guides newzealand to the strong position in 1st test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X