For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலிக்கு நடந்த அநீதி.. தவறான முடிவால் சர்ச்சையில் சிக்கிய நடுவர்.. கொந்தளித்த ரசிகர்கள்!

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அநீதி நடந்திருப்பதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Recommended Video

விராட் கோலிக்கு நடந்த அநீதி.. தவறான முடிவால் சர்ச்சையில் சிக்கிய நடுவர் - வீடியோ

இரு அணிகளும் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பான அடிதளத்தை அமைத்தது.

இது மட்டும் நடந்தால் நியூசிலாந்து காலி.. ஆனால் நடத்தி காட்டுமா இந்தியா?இது மட்டும் நடந்தால் நியூசிலாந்து காலி.. ஆனால் நடத்தி காட்டுமா இந்தியா?

திடீரென சரிந்த விக்கெட்கள்

திடீரென சரிந்த விக்கெட்கள்

தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். இதனால் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 80 ரன்களாக உயர்ந்து வலுவான நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால் திடீரென வந்த ஸ்பின்னர் அஜாஷ் படேல், அடுத்தடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சீனியர் வீரர் புஜாரா 5 பந்துகளை சந்தித்து டக் அவுட்டும், விராட் கோலி கோல்டன் டக் அவுட்டும் ஆனார்.

நீடித்த குழப்பம்

நீடித்த குழப்பம்

நீண்ட நேரமாக அதனை ஆராய்ந்து வந்த 3வது நடுவர் வீரேந்தர் சர்மா, பந்து முதலில் பேட்டில் பட்டதா? அல்லது பேடில் பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் குழம்பி வந்தார். இறுதியில் சரியான முடிவு எடுக்க முடியவில்லை, எனக்கூறி கள நடுவரின் முடிவான அவுட்டையே கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மற்றும் விராட் கோலி ஆகியோர் கொந்தளித்தனர்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

ஒரு முடிவு சரியாக எடுக்க முடியவில்லை என்றால், எப்படி அவுட் என்பதை இறுதிப்படுத்தி முடிவெடுப்பீர்கள் என நிதின் மேனனிடம் கேப்டன் விராட் கோலி வாக்குவாதம் செய்தனர். மேலும் ரசிகர்களும் பாட்டில்களை வீசி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 உண்மையில் என்ன நடந்தது

உண்மையில் என்ன நடந்தது

உண்மையில் விராட் கோலி விக்கெட் ஆகவில்லை என்றே முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கோலியின் பேட்டில் முதலில் பட்டிருந்தால் தான் பந்தானது வலது பக்கம் திரும்பியிருக்கும். பேடின் மீது நேரடியாக பட்டிருந்தால், இடது பக்கம் திரும்பியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். அதன்படி பார்த்தால் கோலிக்கு கொடுக்கப்பட்டது தவறான முடிவு எனக்கூறுகின்றனர்.

Story first published: Friday, December 3, 2021, 15:41 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
Virat kohli gets dissappointed after the umpires wrong decision on his wicket in 2nd test against newzealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X